#Breaking: மேகதாது அணை – முதல்வர் தலைமையில் தொடங்கியது அனைத்துக்கட்சி கூட்டம்.!

A meeting of the legislative parties, chaired by Chief Minister Mk Stalin, began to discuss the Meghadau Dam.

மேகதாது அணை குறித்து விவாதிக்க முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையில் சட்டமன்ற கட்சிகளின் கூட்டம் தொடங்கியது.

சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதல்வர் முக ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். விவசாயிகளின் நலனை காக்க அனைத்து தரப்பினரின் கருத்தை பிரதிபலிப்பதற்காக அனைத்து கட்சி கூட்டம் நடைபெறுகிறது. சட்டப்பேரவையில் இடம்பெற்றுள்ள அனைத்து கட்சிகளும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

அதன்படி, திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக, மதிமுக, விசிக, சிபிஎம், சிபிஐ உள்ளிட்ட 13 கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். கர்நாடக அணை கட்டுவதை தடுப்பது குறித்து அனைத்து கட்சிகளின் கருத்துக்களை கேட்டறிகிறார் முதல்வர் முக ஸ்டாலின். கர்நாடக முதல்வர் எடியூரப்பா மேகதாது அணையை கட்டியே தீருவோம் என கூறி வரும் நிலையில், ஆலோசனை நடைபெற்று வருகிறது.