#Breaking : திமுக தலைவர் ஸ்டாலினின் மகள் வீட்டில் ஐ.டி.ரெய்டு...!

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மகள், செந்தாமரை வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மகள், செந்தாமரை வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 3 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், தமிழக அரசியல் களம் பரபரப்பாக காணப்படுகிறது. அதே போல், பறக்கும் படை அதிகாரிகள் மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொள்வதில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மகள், செந்தாமரை வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். ஸ்டாலினின் மருமகன் சபரீசன் வீட்டிலும் வருமானவரித்துறையினர் சோதனை நடத்துகின்றனர். மேலும், அண்ணாநகர் திமுக வேட்பாளர் மோகனின் மகன் கார்த்திக், ஜீ ஸ்கொயர் பாலா வீட்டிலும் சோதனை மேற்கொள்கின்றனர். ஏற்கனவே திமுக வேட்பாளர் எ.வ.வேலு வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

#Breaking : திமுக தலைவர் ஸ்டாலினின் மகள் வீட்டில் ஐ.டி.ரெய்டு...!