#Breaking:"தியாகிகள் பென்சன் ரூ.10 ஆயிரமாகவும்;ஈமச்சடங்கு நிதியுதவி ரூ.25 ஆயிரமாகவும் உயர்வு" – புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு..!

#Breaking: "Education loan cancellation, Eemachadangu financial assistance increased to Rs. 25,000" - Puducherry Chief Minister Rangasamy announcement ..!

புதுச்சேரியில் தியாகிகள் பென்சன் ரூ.9 ஆயிரத்திலிருந்து ரூ.10,000 ஆயிரமாக உயர்த்தப்படும் என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

புதுச்சேரி சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 5 நாட்களாக நடைபெற்று வருகிறது.அதன்படி,இன்று நடைபெற்று வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் புதுச்சேரி முதல்வர் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை அறிவித்து வருகிறார்.அதன்படி,

புதுச்சேரியில் தியாகிகள் பென்சன் ரூ.9 ஆயிரத்திலிருந்து ரூ.10,000 ஆயிரமாக உயர்த்தப்படும்.

பட்டியலின மக்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் ரூ.500 உயர்த்தப்படும்.

ஆதிதிராவிட மற்றும் பட்டியலின மக்களின் ஈமச்சடங்கு நிதியுதவி ரூ.15 ஆயிரத்திலிருந்து ரூ.25 ஆயிரமாக உயர்த்தப்படும்.

பயிற்சி மருத்துவர்களுக்கான ஊக்கத்தொகை ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.20 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.

புதுச்சேரி சுகாதாரத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் மருத்துவர்கள் உள்ளிட்ட ஒப்பந்த பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவர்.

பிற்படுத்தப்பட்ட மேம்பாட்டுக் கழகம் மூலம் மாணவர்கள் பெற்ற கடன்கள் அனைத்தும் ரத்து செய்யப்படும்.

சென்டாக் மூலம் தேர்வு செய்யப்படும் மாணவர்களின் கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும்.

புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு,குறைந்த பட்ச ஊதியம் மாதம் ரூ.10 ஆயிரம் வழங்கப்படும்”,என்று தெரிவித்துள்ளார்.