#Breaking:சுற்றுச்சூழல் பூங்கா திறப்பு;பாரதி நினைவு நூற்றாண்டு விருதுகள் வழங்கிய முதல்வர் ஸ்டாலின்!

#Breaking: Eco Park Opening; Chief Minister Stalin presents Bharti Memorial Centenary Awards!

சென்னை:பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் சுற்றுச்சூழல் பூங்காவை முதல்வர் ஸ்டாலின் தற்போது திறந்து வைத்துள்ளார் மற்றும் பாரதி நினைவு நூற்றாண்டு விருதுகளையும் இருவருக்கு முதல்வர் வழங்கியுள்ளார்.

பள்ளிக்கரணைசதுப்புநிலத்தில்20 கோடி ரூபாய் செலவில் 2.58 ஹெக்டர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள சுற்றுச்சூழல் பூங்காவை (environment park) முதல்வர் ஸ்டாலின் சென்னை, தலைமை செயலகத்தில் இருந்து காணொலி வாயிலாக தற்போது திறந்து வைத்துள்ளார்.

இந்த பூங்காவில் சதுப்பு நில விவரங்களை மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் பெயர் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் சுமார் 41 பறவை இனங்கள் உள்ளதாக கூறப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து,தமிழ் வளர்ச்சி துறை சார்பில் ‘பாரதியார் நினைவு நூற்றாண்டு விருதுகளை’ முதல்வர் ஸ்டாலின் வழங்கியுள்ளார். அதன்படி,சீனிவாசன்,மணிகண்டன் ஆகியோருக்கு ரூ.3 லட்சத்துடன் பாராட்டு சான்றிதழ்களையும் முதல்வர் வழங்கினார்.பாரதியார் குறித்தும்,அவரது படைப்புகள் குறித்தும் ஆய்வு செய்ததால் இவர்கள் இருவருக்கும் பாரதியார் நினைவு நூற்றாண்டு விருது வழங்கப்பட்டுள்ளது.