#BREAKING: கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களும் வாக்கு அளிக்கலாம்-சத்யபிரதா சாகு ..!

SatyabrataSahoo said those receiving treatment for corona infection have been allotted one hour to vote.

கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் வாக்களிக்க ஒரு மணி நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறுகையில், கொரோனா காலம் என்பதால் சட்டப்பேரவை தேர்தலில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் வாக்களிக்க ஒரு மணி நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு அன்று கடைசி ஒரு மணி நேரத்தில், பாதுகாப்பு கவச உடையுடன் வாக்களிக்கலாம் என அறிவித்துள்ளார்.

மேலும், மாஸ்க் அணிந்து வந்தால்தான் வாக்காளர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தமிழ் முழுவதும் மார்ச் 3-ம் தேதி வரை ரூ.11 கோடி மதிப்பிலான பணம் பரிசுப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

சட்டமன்ற தேர்தலை கண்காணிக்க 4 சிறப்பு பார்வையாளர்கள் தமிழகம் வர உள்ளனர் என கூறினார்.

#BREAKING: கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களும் வாக்கு அளிக்கலாம்-சத்யபிரதா சாகு ..!