#BREAKING: தொகுதிப் பங்கீடு இழுபறி.. மார்க்சிஸ்ட் அவசர ஆலோசனை..!

An emergency meeting of the Marxist Party is scheduled to be held in Chennai at 1 pm.

சென்னையில் மதியம் 1 மணிக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் அவசர செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது.

திமுகவுடன் தொகுதி பங்கீட்டில் உடன்பாடு எட்டப்படாத நிலையில் மார்க்சிஸ்ட் அவசர செயற்குழுக் கூட்டம் நடைபெற உள்ளது. சென்னையில் மதியம் 1 மணிக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் அவசர செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது. திமுகவுடன் தொகுதிப் பங்கீடு விவகாரத்தில் இழுபறி நீடித்து நிலைக்கும் மார்க்சிஸ்ட் ஆலோசிக்க உள்ளது.

இன்று பிற்பகல் 1 மணிக்கு திமுகவுடன் பேச்சுவார்த்தைக்கு சென்ற நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளனர். இன்று காலை மார்க்சிஸ்ட் கட்சி சார்பாக முதற்கட்ட தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தைக்காக அண்ணா அறிவாலயத்திற்கு கே.பாலகிருஷ்ணன் தலைமையிலான குழுவினர் ஆலோசனையில் ஈடுபட்டனர். இந்த ஆலோசனையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.

தாங்கள் கேட்ட எண்ணிக்கைக்கு மிகக் குறைவான தொகுதி திமுக தரப்பில் ஒதுக்குவதாக தெரிவித்ததால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அதிருப்தி என தகவல் வெளியாகி உள்ளது.

#BREAKING: தொகுதிப் பங்கீடு இழுபறி.. மார்க்சிஸ்ட் அவசர ஆலோசனை..!