#Breaking:"ஆம் ஆத்மி கட்சியின் பஞ்சாப் முதல்வர் வேட்பாளர் இவர்தான்" – அரவிந்த் கெஜ்ரிவால் முக்கிய அறிவிப்பு!

#Breaking: Aam Aadmi Party Punjab Chief Ministerial Candidate - Arvind Kejriwal Important Announcement!

பஞ்சாப் மாநில முதல்வர் வேட்பாளராக பகவத் மான் போட்டியிடுவார் என ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும்,டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

117 இடங்களைக் கொண்ட பஞ்சாப் மாநில சட்டப்பேரவைக்கு பிப்ரவரி 14 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என்று முன்னதாக தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்து.மேலும்,தேர்தலில் பதிவான வாக்குகள் மார்ச் 10 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன்பின்னர்,ஒரு விழா நடைபெறுவதையொட்டி,தேர்தல் ஒத்திவைக்கப்பட்டு பிப்ரவரி 20 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

இந்நிலையில்,பஞ்சாப் மாநில முதல்வர் வேட்பாளராக பகவத் மான் போட்டியிடுவார் என ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும்,டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.மேலும்,பகவத் மான் பஞ்சாப் மாநிலத்தை பெருமையடைய செய்வார் என்றும் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பகவத் மான்,பஞ்சாப் மாநிலம் சங்ரூர் தொகுதியில் தற்போது ஆம் ஆத்மி கட்சியின் மக்களவை எம்.பி. ஆக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

unknown nodeunknown node