Arvind Kejriwal : அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவலை வரும் ஏப்ரல் 1ஆம் தேதி வரையில் நீட்டித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2021-2022 ஆண்டு காலத்தில் டெல்லியில் அமல்படுத்தப்பட்டு பின்னர் திரும்ப பெறப்பட்ட புதிய மதுபான கொள்கை திட்டத்தின் காரணமாக அரசுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பீடு ஏற்பட்டதாக குற்றசாட்டு எழுந்தது. இந்த வழக்கில் சட்ட விரோத பணப்பரிவர்த்தனை நடைபெற்றதாக கூறி டெல்லி மாநில முன்னாள் அமைச்சர்கள் மணீஷ் சிசோடியா, சத்யேந்திர ஜெயின் ஆகியோர் […]
சண்டிகர் மேயர் தேர்தல் கடந்த மாதம் நடைபெற்றது. அதில் ஆம் ஆத்மி – காங்கிரஸ் கூட்டணி அமைத்து ஆம் ஆத்மி சார்பாக குலதீப் குமார் போட்டியிட்டார். பாஜக சார்பில் மனோஜ் சோன்கர் போட்டியிட்டார். இதில், பாஜக வேட்பாளர் மனோஜ் சோன்கர் 16 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றதாகவும், ஆம் ஆத்மி வேட்பாளர் குல்தீப் குமாருக்கு ஆதரவாக பதிவான 20 வாக்குகளில் 8 வாக்குக்கள் செல்லாத வாக்குகள் என அறிவித்தார் தேர்தல் அதிகாரி அனில் மசிஹ். தேர்தல் அதிகாரி […]
சமீபத்தில் சண்டிகர் மேயர் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் இந்தியக் கூட்டணி இணைந்து எதிர்கொண்டன. பாஜக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலுக்கு முன்பாக இந்திய கூட்டணி வேட்பாளர் வெற்றி பெறுவார் என அனைவரும் எதிர்பார்த்தனர். காரணம் மேயர் தேர்தலில் மொத்தம் 36 கவுன்சிலர்கள் வாக்கு அளித்தனர். இதில் இந்திய கூட்டணி கவுன்சிலர் அதிகம், இந்த மேயர் தேர்தலில் பாஜகவிற்கு 16 வாக்குகளும், இந்திய கூட்டணி 20 வாக்குகளும் கிடைத்தன. ஆனால் இந்திய […]
சண்டிகரில் நடைபெற்ற மேயர் தேர்தலில் மோசடி நடைபெற்றுள்ளது என்று ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கட்சியினர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். சண்டிகரில் இன்று காலை மேயர் தேர்தல் நடைபெற்றது. இதில், பாஜகவை எதிர்த்து இந்தியா கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் களமிறங்கின. மொத்தம் 35 உறுப்பினர்களைக் கொண்ட சண்டிகர் மாநகராட்சியில், பாஜக 16 வாக்குகளையும், இந்தியா கூட்டணி 12 வாக்குகளையும் பெற்றன. இதில், 8 வாக்குகள் செல்லாது என அறிவிக்கப்பட்டு, பாஜகவின் மனோஜ் சோங்கர் […]
சண்டிகரில் மேயர் தேர்தலின் வாக்குப்பதிவு இன்று காலை நடைபெற்றது. இதில், பாஜகவை எதிர்த்து இந்தியா கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் களமிறங்கின. அதன்படி, 35 உறுப்பினர்களைக் கொண்ட சண்டிகர் மாநகராட்சியில், பாஜக 16 வாக்குகளையும், இந்தியா கூட்டணி 12 வாக்குகளையும் பெற்றன. இதில், 8 வாக்குகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது. இதனால், ஆம் ஆத்மி கட்சியின் குல்தீப் குமாரை தோற்கடித்து பாஜகவின் மனோஜ் சோங்கர் இந்த மேயர் தேர்தலில் வெற்றி பெற்றார். சண்டிகர் மேயர் […]
சண்டிகர் மாநகராட்சி மேயர், மூத்த மேயர், துணை மேயர் ஆகிய பதவிகளுக்கான வாக்குப்பதிவு பஞ்சாப் மற்றும் ஹரியானா நீதிமன்ற அறிவுறுத்தல் படி இன்று நடைபெற்றது. இதில் காங்கிரஸ் – ஆம் ஆத்மி கட்சி இணைந்து போட்டியிட்டது. இந்தியா கூட்டணியின் அடிப்படையில் ஆம் ஆத்மி கட்சி மேயர் பதவிக்கும், காங்கிரஸ் கட்சி மூத்த துணை மேயர் மற்றும் துணை மேயர் பதவிக்கும் போட்டியிட்டன. சண்டிகரில் மேயர் பதவிக்கான தேர்தல் இன்று காலை 10 மணிக்கு தொடங்க இருந்த நிலையில் […]
டெல்லி மாநில முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த 8 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறார். கடந்த முறை 2020ஆம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 62 தொகுதிகளை ஆம் ஆத்மி கைப்பற்றி உள்ளது. பாஜக 8 எம்எல்ஏக்களை கொண்டுள்ளது. பெரும்பான்மைக்கு 36 எம்எல்ஏக்களை பெற்று இருக்க வேண்டும். இந்நிலையில் முன்னதாக, ஆளும் ஆம் ஆத்மி அரசு டெல்லி மதுபான கொள்கையில் ஊழல் செய்ததாகவும், அதன் மூலம் சட்டவிரோத பண பரிவர்த்தனை நடைபெற்றதாகவும் குற்றம் சாட்டப்பட்டு ஆம் […]
ஆம் ஆத்மி கட்சி தலைவரும், டெல்லி மாநில முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் , தனது கட்சி தொண்டர்களுடன் அண்மையில் உரையாற்றினார். அப்போது மக்கள் நலனுக்காக நாங்கள் தேர்ந்தெடுக்க பாதையில் பயணித்து வருகிறோம் . அதன் காரணமாக கட்சியில் இருக்கும் தொண்டர்கள் சிறைக்கு செல்லவும் தயராக இருக்க வேண்டும் என குறிப்பிட்டு பேசினார் . மேலும் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் ஆம் ஆத்மி அரசியல் தலைவர்களை நினைத்து பெருமைப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். குழந்தைகளுக்கு நல்ல கல்வி […]
டெல்லியில் நடந்த மதுபான ஊழல் வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான சஞ்சய் சிங், டெல்லி முன்னாள் கல்வி அமைச்சர் மணீஷ் சிசோடியா ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஜாமீன் கோரி சஞ்சய் சிங் தாக்கல் செய்த மனு இன்று நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது. இதற்கிடையில், தலைநகர் டெல்லியில் நடந்த மதுபான ஊழல் வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது. இதற்காக கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை 3-வது முறையாக சம்மன் […]
டெல்லி மதுபான கொள்கை ஊழலில் தெலுங்கனா முதல்வர் சந்திரசேகர் ராவின் மகளான கே.கவிதாவும் ஒருவர் என அமலாக்கத்துறை தகவல். டெல்லியில் ஆம் ஆத்மி அரசின் மதுபான கொள்கை முடிவில் பெரும் ஊழல் நடந்துள்ளது என்று கூறி விசாரணை அமைப்புகளான சிபிஐ, அமலாக்கத்துறை குற்றசாட்டை முன்வைத்திருந்தது. அதாவது, டெல்லியில் ஆம் ஆத்மி அரசானது தனியார் மதுபான கடைகளுக்கு அனுமதி மற்றும் சலுகைகளை வழங்கியது. இதன்பின் மதுபான கொள்கை முடிவில் ஊழல் நடந்துள்ளது என கூறப்பட்டது. இதன் விளைவாக டெல்லி […]
குஜராத் சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் இசுதான் காத்வி என்பவர் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். குஜராத் சட்டமன்ற தேர்தல் மொத்தம் 182 தொகுதிகளில் வரும் டிசம்பர் மாதம் 1 மற்றும் 5 என இரு கட்டங்களாக நடைபெற உள்ளது. முதற்கட்டத்தில் 89 தொகுதிகளுக்கும், 2ஆம் கட்டத்தில் 93 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் முதற்கட்ட தொகுதிகளுக்கு நவம்பர் 5ஆம் தேதியும், இரண்டாம் கட்ட தேர்தலுக்கு நவம்பர் 10ஆம் தேதியும் தொடங்க உள்ளது. […]
பஞ்சாப் மாநிலத்தில் இன்று ஆளும் ஆம் ஆத்மி கட்சி தங்கள் பெரும்பான்மையை நிரூபிக்க நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உள்ளது. மத்தியில் ஆளும் பாஜக அரசு, ‘ஆபரேஷன் லோட்டஸ்’ எனும் பெயரில் பல்வேறு மாநில எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்குகிறது, விலைக்கு வாங்க முயற்சிக்கிறது என்று பல்வேறு மாநில முதல்வர்கள் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், பஞ்சாப் மாநிலத்தில் 7 முதல் 10 எம்.எல்.ஏக்களை 25 கோடி வரை பேரம் பேசி வருகின்றனர் என பஞ்சாபில் அம்மாநில நிதியமைச்சர் பகிரங்கமாக […]
ஆம் ஆத்மி கட்சியின் மாநிலத் தலைவர் அனுப் கேசரி, பொதுச் செயலாளர் சதீஷ் தாக்கூர் மற்றும் உன்னா மாவட்டத் தலைவர் இக்பால் சிங் பாஜகவில் இணைந்துள்ளனர். இமாச்சலப் பிரதேசத்தில் ஆம் ஆத்மி கட்சியின் மாநிலத் தலைவர் அனுப் கேசரி, பொதுச் செயலாளர் சதீஷ் தாக்கூர் மற்றும் உன்னா மாவட்டத் தலைவர் இக்பால் சிங் உள்ளிட்ட மூவரும் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா இல்லத்தில் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர். கடந்த மாதம், […]
முன்னதாக உத்தரப்பிரதேசம்,உத்தரகாண்ட்,கோவா,பஞ்சாப், மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. ஆம் ஆத்மி வெற்றி: இதனையடுத்து,5 மாநில தேர்தலில் பதிவான வாக்குகள் என்னும் பணிகள் மார்ச் 10 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது.அதன்படி,பஞ்சாப் மாநிலத்தின் 117 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 92 இடங்களில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றது.மேலும்,இந்த தேர்தலில்,பஞ்சாபின் துரி தொகுதியில், ஆம் ஆத்மி கட்சி சார்பில் போட்டியிட்ட முதல்வர் வேட்பாளர் பகவந்த் மான் வெற்றி பெற்றார். ராஜ்பவனில் அல்ல;பகத்சிங் பிறந்த ஊரில்தான்: இதனையடுத்து,தேர்தல் […]
உபி,பஞ்சாப்,கோவா,மணிப்பூர் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களுக்கு அண்மையில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில்,நேற்று முன்தினம் ஆக்கு எண்ணிக்கை நடைபெற்றது.இதில்,பஞ்சாப் தவிர நான்கு இடங்களில் பாஜக பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதே சமயம்,பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ள நிலையில் புதிய அரசின் பதவியேற்பு விழா மார்ச் 16-ஆம் தேதி நடைபெறுகிறது.ஆளுநா் மாளிகைக்குப் பதிலாக சுதந்திரப் போராட்டத் தியாகி பகத் சிங் பிறந்த ஊரான கத்கா் கலன் கிராமத்தில் நடைபெறும் […]
பஞ்சாப் மாநிலத்தின் 117 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலில், பஞ்சாபின் துரி தொகுதியில், ஆம் ஆத்மி கட்சி சார்பில் போட்டியிட்ட பகவந்த் மான் வெற்றி பெற்றுள்ளார். இந்த நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் பகவந்த் மான் பஞ்சாப் முதல்வராக வரும் 16-ஆம் தேதி பதவியேற்கிறார். அவர் கூறியபடி பகத்சிங் பிறந்த ஊரான கட்கர் கலானில் முதல்வராக பதவியேற்றுக் கொள்கிறார். பகவந்த் மான் பதவியேற்பு விழாவில் பங்கேற்க […]
பஞ்சாப் மாநிலத்தின் 117 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலில், பஞ்சாபின் துரி தொகுதியில், ஆம் ஆத்மி கட்சி சார்பில் போட்டியிட்ட பகவந்த் மான் வெற்றி பெற்றுள்ளார். இந்த நிலையில், இதுகுறித்து பகவந்த் மான் கூறுகையில், பகத்சிங்கின் கிராமமான கட்கர்காலனில் நான் முதல்வராக பதவியேற்பேன்; ராஜ்பவனில் அல்ல. பஞ்சாபின் எந்த அரசு அலுவலகங்களிலும் முதல்வரின் புகைப்படங்கள் இருக்காது; பகத் சிங் மற்றும் பாபாசாகேப் அம்பேத்கர் படங்கள் மட்டுமே […]
பஞ்சாப் மாநில முதல்வர் வேட்பாளராக பகவத் மான் போட்டியிடுவார் என ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும்,டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். 117 இடங்களைக் கொண்ட பஞ்சாப் மாநில சட்டப்பேரவைக்கு பிப்ரவரி 14 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என்று முன்னதாக தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்து.மேலும்,தேர்தலில் பதிவான வாக்குகள் மார்ச் 10 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்பின்னர்,ஒரு விழா நடைபெறுவதையொட்டி,தேர்தல் ஒத்திவைக்கப்பட்டு பிப்ரவரி 20 ஆம் தேதி ஒரே […]
கோவாவில் வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை மற்றும் வேலையின்மை நிவாரணம் பற்றி முக்கிய அறிவிப்புகளை ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று அறிவித்துள்ளார். கோவாவில் ஆம் ஆத்மி கட்சி அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் ஆளும் பாஜக மற்றும் காங்கிரஸை எதிர்கொள்ள தயாராகி வருகிறது. இந்நிலையில்,கோவாவில் வேலைகள் மற்றும் வேலையின்மை நிவாரணம் பற்றி முக்கிய அறிவிப்புகளை டெல்லி முதல்வரும்,ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் இன்று அறிவித்துள்ளார். Hon’ble Delhi CM […]
ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளராக(National Convenor) டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது.இக்கூட்டத்தில் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளராக (National Convenor) டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதேபோல,கட்சியின் செயலாளராக பங்கஜ் குப்தா மற்றும் பொருளாளராக என்.டி.குப்தா மீண்டும் தேர்வு செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.