பாகிஸ்தான் பிரதமரை அண்ணன் என அழைத்த சித்து – பாஜக கண்டனம்!

The BJP has condemned state Congress leader Sidhu for saying that Pakistani Prime Minister Imran Khan is like his brother.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தனது அண்ணன் போன்றவர் என மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சித்து கூறியதற்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் கர்தார்பூரில் நடைபெற்ற குருத்வாராவில் காங்கிரஸ் தலைவர் சித்து அவர்கள் சென்று இருந்தார். அப்போது அங்கு வழிபாடு நடத்திய சிந்துவுக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் சார்பில் உயர் அதிகாரிகள் மலர் தூவி மரியாதை செலுத்தி வரவேற்றனர்.

மேலும் குருத்வாராவில் வழிபாடு நடத்திய பின் சித்து அளித்த பேட்டியில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தனக்கு அண்ணன் போன்றவர் என கூறியுள்ளார். இது கடும் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது. ட்ரோன் மூலமாக ஆயுதத்தையும், போதை பொருட்களையும் அனுப்பும் இம்ரான்கான்  போன்றவர்களுக்கு சித்து ஆதரவளிக்கிறார் என பாஜக குற்றம் சாட்டி உள்ளது.