மெரினாவில் போராட்டம்  – ஹெச்.ராஜா உள்ளிட்ட பாஜகவினர் கைது

கண்ணனை கைது செய்யக்கோரி பாஜக சார்பில் சென்னை மெரினாவில் போராட்டம்  நடைபெற்றது. போராட்டத்தில் பங்கேற்ற பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன், ஹெச்.ராஜா உள்ளிட்ட

கண்ணனை கைது செய்யக்கோரி பாஜக சார்பில் சென்னை மெரினாவில் போராட்டம்  நடைபெற்றது.

போராட்டத்தில் பங்கேற்ற பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன், ஹெச்.ராஜா உள்ளிட்ட பாஜகவினர் கைது செய்யப்பட்டனர்.

குடியுரிமை திருத்த சட்டத்தினை கண்டித்து நெல்லை மேலப்பாளையத்தில் இஸ்லாமிய அமைப்பு சார்பில் கண்டன கூட்டம் நடத்தப்பட்டது.இந்த கூட்டத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் ,மேடை பேச்சாளர் நெல்லை கண்ணன்  உள்ளிட்டோர் கலந்து கொண்டார். அப்பொழுது நெல்லை கண்ணன் பேசுகையில்,பிரதமர் மோடி மற்றும்  மத்திய உள்துறை அமைச்சர்  அமித்ஷா ஆகியோர் குறித்து பேசியது சர்ச்சையாக வெடித்தது.இவரது பேச்சுக்கு பாஜக சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டு  போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

இதனையடுத்து 3 பிரிவுகளின் கீழ் நெல்லை கண்ணன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.கண்ணனை கைது செய்யக்கோரி பாஜக சார்பில் சென்னை மெரினாவில் போராட்டம்  நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.எனவே இன்றுநெல்லை கண்ணனை கைது செய்யக்கோரி சென்னை மெரினாவில் போராட்டம் நடத்தப்பட்டது.இந்த போராட்டத்தில் பங்கேற்றபொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன், ஹெச்.ராஜா உள்ளிட்ட பாஜகவினர் கைது செய்யப்பட்டனர்.

மெரினாவில் போராட்டம்  – ஹெச்.ராஜா உள்ளிட்ட பாஜகவினர் கைது