உண்மை பேசுபவர்களுக்கு தண்டனை கிடைக்கிறதென்றால்; பொய் ஆட்சியில் உள்ளது – ராகுல் காந்தி!

Rahul Gandhi has posted that if those who speak the truth are punished, it becomes clear that lies are in power.

உண்மை பேசுபவர்களுக்கு தண்டனை கிடைக்கிறதென்றால், பொய் ஆட்சியில் உள்ளது என்பது தெளிவாகிறது என ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.

இன்று நாடு முழுவதும் தேசிய பத்திரிகை தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இன்றைய பத்திரிக்கை தினத்தையொட்டி ராகுல் காந்தி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் மத்திய அரசை கடுமையாக சாடி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் உண்மையைப் பேசுவதற்கு தண்டனை கிடைக்கிறது என்றால், பொய் ஆட்சியில் உள்ளது என்பது தெளிவாக தெரிகிறது என குறிப்பிட்டுள்ளார். மேலும், திரிபுராவில் பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டதையும் இந்த பதிவில் சுட்டி காண்பித்துள்ளார். இதோ அந்த பதிவு,

unknown node