கவனமாக இருங்கள், போலியான கெஜ்ரிவால் உலா வருகிறார் – டெல்லி முதல்வர்!

Be careful, Delhi Chief Minister Arvind Kejriwal has said that the fake Kejriwal is coming around.

கவனமாக இருங்கள், போலியான கெஜ்ரிவால் உலா வருகிறார் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

பஞ்சாபில் முதல்வர் சரீந்தர் சிங் சன்னி அவர்கள் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அடுத்த ஆண்டு பஞ்சாபில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால், தற்போது தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அது போல ஆம் ஆத்மி கட்சியும் பஞ்சாப்பில் தேர்தல் பணியை தொடங்கியுள்ளது. இந்நிலையில், இரண்டு நாள் சுற்றுப்பயணமாக ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளரும், டெல்லி முதல்வருமாகிய கெஜ்ரிவால் அவர்கள் பஞ்சாப் சென்றுள்ளார்.

அப்பொழுது பேசிய அவர், பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி அமைந்தால் பெண்கள் ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் டெபாசிட் செய்யப்படும் என கூறியுள்ளார். மேலும், பேசிய அவர் பஞ்சாபில் போலியான கெஜ்ரிவால் உலா வருவதாகவ முதல்வர் சரீந்தர் சிங் சன்னி அவர்களை சாடியுள்ளார். மேலும் நாடு முழுவதும் ஒரே கெஜ்ரிவால் தான். அவரால் தான் மின்கட்டணத்தை பூஜ்யத்திற்கு கொண்டு வர முடியும். எனவே மக்கள் போலி கெஜ்ரிவாலிடமிருந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என கூறியுள்ளார்.