ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் மோடிக்கு மாம்பழங்களை பரிசளித்த வங்கதேச பிரதமர்..!

வங்கதேசத்தின் பிரதமர் ஷேக் ஹசீனா, ராம்நாத் கோவிந்த், மோடிக்கு ஒரு மெட்ரிக் டன் மாம்பழங்களை பரிசளித்துள்ளார்.

வங்கதேசத்தின் பிரதமர் ஷேக் ஹசீனா, ராம்நாத் கோவிந்த், மோடிக்கு ஒரு மெட்ரிக் டன் மாம்பழங்களை பரிசளித்துள்ளார்.

கடந்த ஆண்டு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி மற்றும் மேற்கு வங்கம், திரிபுரா, அசாம் முதல்வர் ஆகியோருக்கு பிரதமர் ஹசீனா மாம்பழங்களை பரிசாக அளித்திருந்த நிலையில், இந்த ஆண்டும், வங்கதேசத்தின் பிரதமர் ஷேக் ஹசீனா, ராம்நாத் கோவிந்த், மோடிக்கு ஒரு மெட்ரிக் டன் மாம்பழங்களை பரிசளித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வங்கதேசத்தில் மாம்பழ சீசன் தொடங்கியிருக்கிறது. அதன் தொடர்ச்சியாக வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு மெட்ரிக் டன் ‘அம்ராபலி’ மாம்பழங்களை பரிசாக அனுப்பியிருக்கிறார். வங்கதேசம் மற்றும் இந்தியா இடையேயான உறவு புதிய உயரங்களை எட்டியுள்ளது.’ என தெரிவித்துள்ளார்.