வங்கதேசத்தின் பிரதமர் ஷேக் ஹசீனா, ராம்நாத் கோவிந்த், மோடிக்கு ஒரு மெட்ரிக் டன் மாம்பழங்களை பரிசளித்துள்ளார். கடந்த ஆண்டு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி மற்றும் மேற்கு வங்கம், திரிபுரா, அசாம் முதல்வர் ஆகியோருக்கு பிரதமர் ஹசீனா மாம்பழங்களை பரிசாக அளித்திருந்த நிலையில், இந்த ஆண்டும், வங்கதேசத்தின் பிரதமர் ஷேக் ஹசீனா, ராம்நாத் கோவிந்த், மோடிக்கு ஒரு மெட்ரிக் டன் மாம்பழங்களை பரிசளித்துள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வங்கதேசத்தில் மாம்பழ சீசன் தொடங்கியிருக்கிறது. […]
இந்தியாவின் 15 வது குடியரசு தலைவராக ராம்நாத் கோவிந்த் அவர்கள் கடந்த 2017 ஆம் ஆண்டு பதவியேற்ற நிலையில்,அவரின் பதவிக்காலம் வருகின்ற ஜூலை 24 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.இதனால்,அடுத்த குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூலை 18 ஆம் தேதி நடைபெறும் என்று இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்நிலையில்,குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று முதல் தொடங்குகிறது என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.மேலும்,ஜூன் 29-ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய […]
இந்தியாவின் 15 வது குடியரசு தலைவராக ராம்நாத் கோவிந்த் அவர்கள் கடந்த 2017 ஆம் ஆண்டு பதவியேற்ற நிலையில்,அவரின் பதவிக்காலம் வருகின்ற ஜூலை 24 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.இதனால்,அடுத்த குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூலை 18 ஆம் தேதி நடைபெறும் என்று இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில்,வருகின்ற ஜூலை மாதம் குடியரசுத்தலைவர் யார் என்பதற்கான தேர்தல் நடைபெறவுள்ள வேளையில்,திமுக 133 எம்எல்ஏக்கள் 34 எம்பிக்கள் பலத்துடன் உள்ளது.இதற்கிடையில்,மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி […]
இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் புதிய தலைமை தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.தற்போதைய தலைமை தேர்தல் ஆணையர் சுசில் சந்திரா வருகின்ற மே 14 ஆம் தேதியுடன் ஓய்வு பெரும் நிலையில், இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் புதிய தலைவராக ராஜீவ் குமாரை நியமனம் செய்து குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார். நாடு சுதந்திரம் பெற்றதில் இருந்து இதுவரை 24 பேர் தலைமை தேர்தல் ஆணையர்களாக நியமிக்கப்பட்ட நிலையில்,சுசில் சந்திரா 24 வது தலைமை […]
குடியரசு தின விழாவை முன்னிட்டு மத்திய அரசு சார்பில் கலை, மருத்துவம்,சமூகப்பணி,அறிவியல் மற்றும் பொறியியல், வர்த்தகம் மற்றும் தொழில்,இலக்கியம் மற்றும் கல்வி,விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் மற்றும் துறைகளில் சிறப்பாக பணியாற்றுவோருக்கு ஆண்டு தோறும் பத்ம விருதுகளை வழங்கி வருகிறது. பத்ம விருதுகள்: அதன்படி,நடப்பு ஆண்டில் மொத்தம் 128 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டது.அதில் 4 பேருக்கு பத்மவிபூஷண் விருது,17 பேருக்கு பத்ம பூஷண் விருது,107 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் […]
டெல்லி ராஜ்கோட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் நரேந்திரமோடி ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தி உள்ளனர். மகாத்மா காந்தியின் 75-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. அரசியல் பிரபலங்கள் பலரும் அவரது நினைவை போற்றி, சமூகவலைத்தளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் பிரதமர் மோடி அவர்களும், மகாத்மா காந்தியின் உன்னதமான கொள்கைகளை மேலும் பிரபலப்படுத்துவது நமது கூட்டு முயற்சியாகும். தியாகிகள் தினமான இன்று நமது தேசத்தை துணிச்சலுடன் பாதுகாத்த […]
டெல்லியில் குடியரசு தினவிழா நிறைவு பெற்ற நிலையில், பிரதமர் மோடி, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை வழியனுப்பி வைத்தார். நாட்டின் 73-வது குடியரசு தினத்தையொட்டி,டெல்லியில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் தேசியக் கொடியேற்றியுள்ளார். அப்போது,21 துப்பாக்கி குண்டுகள் முழங்கப்பட்டது. தேசிய கீதம் இசைக்கக்கப்பட்டது. இதனையடுத்து, வீரதீர செயல்புரிந்தவர்களுக்கு விருதுகள் வழங்கி குடியரசு தலைவர் கௌரவப்படுத்தினார். இதனைத் தொடர்ந்து, முப்படைகளின் அணிவகுப்பு டெல்லி ராஜபாதையில் தொடங்கி இந்தியா கேட் வரை நடைபெற்று வருகிறது. குடியரசு தலைவர் ராம்நாத் […]
டெல்லி:குடியரசுத்தலைவர் மாளிகையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை,பிரதமர் மோடி சற்று நேரத்தில் சந்திக்க உள்ளார். பஞ்சாப் மாநிலம் ஃபெரோஸ்பூரில் ரூ. 42,750 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்ட இருந்தார்.இந்த நிகழ்ச்சிக்காக நேற்று பஞ்சாப் வந்த பிரதமர் மோடி,விமான நிலையத்திலிருந்து நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு ஹெலிகாப்டர் மூலம் செல்ல இருந்த நிலையில் மோசமான வானிலை கரணமாக ஹெலிகாப்டர் பயணம் ரத்து செய்யப்பட்டு சாலை மார்க்கமாக பிரதமர் சென்றார். அப்போது,பதிண்டா என்ற இடத்தில் மேம்பாலத்தில் ஏராளமான […]
மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்ய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார். நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில், 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதாக சமீபத்தில் பிரதமர் மோடி அறிவித்தார். அதன்படி, டெல்லியில் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர்கடந்த திங்கள் கிழமை காலை தொடங்கியது. இந்தக் குளிர்காலக் கூட்டத்தொடரானது டிசம்பர் 23 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் தொடங்கிய முதல்நாளே மக்களவை, மாநிலங்களவையில் 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வழிவகுக்கும் மசோதா […]
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் 2 நாள் சுற்றுப்பயணமாக உத்தர பிரதேசத்திற்கு சென்றடைந்துள்ளார். குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக இன்றும், நாளையும் உத்தர பிரதேசம் செல்ல உள்ளதாக ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்பொழுது குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் கான்பூர் விமான நிலையத்தை சென்றடைந்துள்ளார். அவரை உத்தரபிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல், முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் வரவேற்றுள்ளனர். சவுத்ரி ஹர்மோகன் சிங் யாதவின் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவில் குடியரசுத் […]
இரண்டு நாள் பயணமாக உத்திரப்பிரதேச பயணம் மேற்கொள்கிறார் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த். குடியரசு மாளிகை அறிவித்துள்ள அறிவிப்பின்படி, குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் நவம்பர் 24, 25 ஆம் தேதிகளில் உத்திரப்பிரதேசத்தில் உள்ள கான்பூருக்கு பயணம் செய்யவுள்ளார். இவர் நவம்பர் 24 ஆம் தேதி அன்று சௌத்ரி ஹர்மோகன் சிங் யாதவின் பிறந்த நாள் நூற்றாண்டு விழாவில் பங்கு கொள்ள உள்ளார். அவ்விழாவில் கலந்து கொண்டு உரையாற்றவிருக்கிறார். மேலும், நவம்பர் 25 ஆம் தேதி அன்று ஹர்கோர்ட் பட்லர் […]
குடியரசு தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி. குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் இன்று தனது 76-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையடுத்து, இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், தனது ட்விட்டர் பக்கத்தில் அவருக்கு வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ‘அவரது தாழ்மையான ஆளுமை காரணமாக, அவர் முழு நாட்டையும் நேசித்தார். சமுதாயத்தின் ஏழை மற்றும் ஓரங்கட்டப்பட்ட பிரிவினரை மேம்படுத்துவதில் அவரது கவனம் முன்மாதிரியாக உள்ளது. அவர் நீண்ட மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையை […]
கொரோனா தொற்று நாட்டின் பொருளாதாரத்தை கடுமையாக பாதித்துள்ளது என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்கள் கூறியுள்ளார். நாடு முழுவதும் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து கொண்டே தான் உள்ளது. இந்நிலையில், இது குறித்து பேசியுள்ள ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்கள், கொரோனா பாதிப்பால் கடந்த 18 மாதங்களாக நாட்டில் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் பாதிப்படைந்துள்ள பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்காக அரசாங்கம் பல்வேறு வழிகளில் முயற்சி செய்வதாகவும், அது மட்டுமல்லாமல் இந்த கொரோனா […]
முன்னாள் எம்பி சந்தன் மித்ரா மறைவு இந்திய பத்திரிகைத் துறையில் ஒரு வெற்றிடத்தை உருவாக்குகிறது என்று குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். முன்னாள் மாநிலங்களவை உறுப்பினரும்,மூத்த பத்திரிகையாளருமான சந்தன் மித்ரா அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று நள்ளிரவு காலமானார். இவரது மறைவுக்கு, மாநிலங்களவை எம்பி ஸ்வபன் தாஸ்குப்தா போன்ற தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ள நிலையில், பிரதமர் மோடி அவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளார். இந்நிலையில்,அவரது மறைவுக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த்,இரங்கல் தெரிவித்துள்ளார்.மேலும்,இது தொடர்பாக அவர் கூறியதாவது: “சந்தன் […]
குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் 4 நாள் சுற்றுப்பயணமாக இன்று தர பிரதேச மாநிலத்திற்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் இன்று 4 நாள் சுற்றுப்பயணமாக உத்தரபிரதேசம் செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நான்கு நாட்கள் உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் நடைபெறக்கூடிய பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தான் குடியரசுத் தலைவர் உத்திரபிரதேசம் செல்கிறார். ஜென்மாஸ்டமியை முன்னிட்டு வருகிற 29-ஆம் தேதி அயோத்தி ராமர் கோயிலில் குடியரசுத் தலைவர் வழிபாடு நடத்துகிறாராம். […]