நெருங்கும் சட்டமன்ற தேர்தல் – இன்று கூடுகிறது தமிழக அமைச்சரவை

Approaching Assembly Election - Tamil Nadu Cabinet meets today

தமிழக அமைச்சரவைக் கூட்டம் இன்று கூட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் பிப்ரவரி 2 ஆம் தேதி தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன்,சென்னை கலைவாணர் அரங்கில் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் இன்று கூட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் இன்று மாலை அமைச்சரவை கூட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அமைச்சரவை கூட்டத்தில் சட்டப்பேரவை கூட்டத் தொடர்,இடைக்கால பட்ஜெட் குறித்து ஆலோசிக்க உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.