தொலைதூர படிப்புகளை புதிதாக தொடங்க விண்ணப்பிக்கலாம் – யூஜிசி அறிவிப்பு

UGC has announced that distance education courses can be applied to start online classes.

தொலைதூர கல்வி படிப்புகள், ஆன்லைன் வகுப்புகளை தொடங்க விண்ணப்பிக்கலாம் என்று யூஜிசி அறிவித்துள்ளது.

திறந்தநிலை, தொலைதூர கல்வி படிப்புகள், ஆன்லைன் வகுப்புகளை தொடங்க விண்ணப்பிக்கலாம் என்று யூஜிசி (University Grants Commission) அறிவித்துள்ளது.  பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்கள் விண்னப்பிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.

மேலும், படிப்புகளை தொடங்க ஒருமுறை பதிவுக் கட்டணமாக ரூ.25,000 செலுத்த வேண்டும் என்றும் தொலைதூர கல்வியில் படிப்புகளை தொடங்க ரூ.10,000 முதல் ரூ.50,000 வரை பாடத்திற்கேற்ப கட்டணம் கட்ட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 11 உயர்கல்வி நிறுவனங்களில் ஆன்லைன் படிப்புகளை பயிற்றுவிக்க யூஜிசி அனுமதி அனுமதி அளித்துள்ளது என்பது குறிப்பிடப்படுகிறது.