சேர்க்கையை ரத்து செய்வதற்கு தனியாக கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று UGC உத்தரவு. கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் ஏற்கனவே சேர்ந்துள்ள மாணவர்கள் அக்டோபர் 31-ம் தேதிக்குள் பாதியிலேயே வெளியேறும் பட்சத்தில், அவர்கள் செலுத்திய முழு கட்டணத்தையும் திருப்பித்தர வேண்டும் என்று நாடு முழுவதும் உள்ள உயர்கல்வி நிறுவனங்களுக்கு, UGC உத்தரவிட்டது. சேர்க்கையை ரத்து செய்தால் அவர்கள் செலுத்திய அனைத்து கட்டணத்தையும், முழுவதுமாக திருப்பியளிக்க வேண்டும் என்றும் சேர்க்கையை ரத்து செய்வதற்கு தனியாக கட்டணம் வசூலிக்கக் கூடாது எனவும் கூறியுள்ளது. […]
நாடு முழுவதும் +2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகி பல்கலைக்கழகங்கள்,கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.ஆனால்,சிபிஎஸ்இ +2 தேர்வு முடிவுகள் மட்டும் இன்னும் வெளியாகவில்லை.இதனால்,கல்லூரிகளில் மாணவர்கள் சேருவதற்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில்,சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியாகும் முன்னரே மாணவர் சேர்க்கையை முடித்து கொள்ளக்கூடாது என பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவித்துள்ளது.அதன்படி,சிபிஎஸ்இ +2 தேர்வு முடிவுகள் வெளியாகாத நிலையில்,நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளுக்கு இவ்வாறு யுஜிசி அறிவுறுத்தியுள்ளது.மேலும், பல்கலைக்கழகங்கள்,கல்லூரிகளில் சேர சிபிஎஸ்இ மாணவர்களுக்கு உரிய கால அவகாசம் […]
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் தொலைதூர பட்டப் படிப்புகள் செல்லாது என பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) அறிவிப்பு விடுத்துள்ளது. மேலும்,பெரியார் பல்கலைக்கழக தொலைதூர படிப்புகளில் மாணவர்கள் யாரும் சேர வேண்டாம் எனவும் யுஜிசி அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. அதே சமயம்,முன் அனுமதி பெறாமல் தொலைதூரக் கல்வி,ஆன்லைன் வகுப்புகள் நடத்துவது குறித்து பெரியார் பல்கலைக்கழகத்திடம் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழக ஆளுநர், உயர்கல்வித்துறை செயலர் ஆகியோருக்கு யுஜிசி பரிந்துரைத்துள்ளது.
நடப்பு ஆண்டு முதல் முதுகலை படிப்புகளுக்கான பொதுவான பல்கலைக்கழக நுழைவுத் தேர்வை (CUET) அறிமுகப்படுத்த பல்கலைக்கழக மானியக் குழு (UGC) முடிவு செய்திருந்தது. இந்நிலையில்,முதுநிலைப் பட்டதாரி சேர்க்கைக்கான பொதுப் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு (CUET-PG) வருகின்ற ஜூலை 2022 கடைசி வாரத்தில் நடைபெறும் என்று பல்கலைக் கழக மானியக்குழு (UGC) தலைவர் எம் ஜகதேஷ் குமார் அறிவித்துள்ளார். மேலும்,இத்தேர்வுக்கு தேசிய தேர்வு மையத்தின் அதிகாரப்பூர்வ https://nta.ac.in/ இணையதள பக்கத்தில் இன்று முதல் வருகின்ற ஜூன் 18 வரை […]
மாணவர்கள் ஒரே நேரத்தில் 2 முழு நேர பட்டப் படிப்புகளை தொடரலாம் என யுஜிசி அனுமதி. மாணவர்கள் ஒரே பல்கலைக்கழகத்தில் அல்லது வெவ்வேறு பல்கலைக்கழகங்களில் இருந்து ஒரே நேரத்தில் இரண்டு முழுநேர பட்டப்படிப்புகளை தொடர முடியும் என யுஜிசி தலைவர் எம் ஜக்தேஷ் குமார் அறிவித்துள்ளார். பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) இது தொடர்பாக விரிவான வழிகாட்டுதல்களை விரைவில் வெளியிடும் என்றும் தெரிவித்துள்ளார். புதிய தேசிய கல்விக் கொள்கையில் (NEP) அறிவிக்கப்பட்டுள்ளபடி, மாணவர்கள் பல திறன்களைப் பெற […]
தொலைதூர கல்வி படிப்புகள், ஆன்லைன் வகுப்புகளை தொடங்க விண்ணப்பிக்கலாம் என்று யூஜிசி அறிவித்துள்ளது. திறந்தநிலை, தொலைதூர கல்வி படிப்புகள், ஆன்லைன் வகுப்புகளை தொடங்க விண்ணப்பிக்கலாம் என்று யூஜிசி (University Grants Commission) அறிவித்துள்ளது. பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்கள் விண்னப்பிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது. மேலும், படிப்புகளை தொடங்க ஒருமுறை பதிவுக் கட்டணமாக ரூ.25,000 செலுத்த வேண்டும் என்றும் தொலைதூர கல்வியில் படிப்புகளை தொடங்க ரூ.10,000 முதல் ரூ.50,000 வரை பாடத்திற்கேற்ப கட்டணம் கட்ட வேண்டும் எனவும் […]