புதுச்சேரியில் மேலும் ஒருவாரம் ஊரடங்கு நீட்டிப்பு!!

The Governor has announced that the curfew order with relaxations in Pondicherry will be extended till next Monday.

புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு வரும் திங்கட்கிழமை வரை நீட்டிக்கப்படுகிறது என ஆளுநர் அறிவித்துள்ளார்.

புதுச்சேரியில் மேலும் ஒருவாரம் ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். அதாவது, வரும் திங்கட்கிழமை வரை புதுச்சேரியில் ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது. கொரோனா பரவலை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.

இதனிடையே, புதுச்சேரியில் தளர்வுகள் உடன் கூடிய ஊரடங்கு நேற்றுவரை வரை அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, இரவுநேர ஊரடங்கு ரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை அமலில் இருந்தது. அத்தியவசியக் கடைகள் தவிர பிற கடைகள் இயங்கத் தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், மே 3-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு நேற்றுடன் முடிவடையும் நிலையில், மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக துணை நிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடப்படுகிறது.