அண்ணாமலை பல்கலைக்கழகம் தொழிற்படிப்புகளை வழங்க தடை கோரி மனு..!

Government of Tamil Nadu responds to Annamalai University's ban on vocational training.

அண்ணாமலை பல்கலைக்கழகம் தொழிற்படிப்புகளை வழங்க தடை கோரிய வழக்கில் தமிழ்நாடு அரசு பதில் தர உத்தரவு.

சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார். அதில், பல்கலைக்கழக மானியக் குழு விதிகளை மீறி அண்ணாமலை பல்கலைக்கழகம் தொழிற்படிப்புகளை வழங்குவதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, தொழிற்படிப்புகளை வழங்க தடை கோரிய வழக்கில் தமிழ்நாடு அரசு, அண்ணாமலை பல்கலைக்கழகம், பல்கலை.மானியக் குழுவும் பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.