சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற நவம்பர் 27-ஆம் தேதி சூறாவளி புயலாக வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறவுள்ளதால் பல மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்து இருந்தது. ஏற்கனவே, கனமழை எதிரொலி காரணமாக திருச்சி பாரதிதாசன் பல்கலை பருவ எழுத்துத்தேர்வுகள் […]
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக, நேற்று மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி விழுப்புரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, திருவாரூர், செங்கல்பட்டு, கடலூர், நாகப்பட்டினம், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்தது. இந்நிலையில், தொடர் கனமழை பெய்த மாவட்டங்களில் நேற்றைய தினம் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அதேபோல், கனமழை காரணமாக சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு நேற்று விடுமுறை அளிக்கப்பட்டது. […]
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி விழுப்புரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, திருவாரூர், செங்கல்பட்டு, கடலூர், நாகப்பட்டினம், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், தொடர் கனமழை காரணமாக கடலூர், மயிலாடுதுறை மற்றும் விழுப்புரம்,திருவண்ணாமலை திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி, அரியலூர், ராணிப்பேட்டை, வேலூர், […]
கடந்த 2003-ஆம் ஆண்டு சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகமானது அரசுடைமையாக்கப்பட்டது. பல்கலைக்கழகத்தை சீர்படுத்தும் பணிக்கு தமிழக அரசு சார்பில் முதன்மைச் செயலாளர் சிவதாஸ் மீனா நியமிக்கப்பட்டார். இந்த பல்கலைக்கழகத்தில் தகுதியில்லாமல் பணியாற்றத் கூடிய பேராசிரியர்கள் பற்றி விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. அதனடிப்படையில், விசாரணை நடத்தப்பட்டு, நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தற்போது அரசு விதிகளின்படி 56 பேராசிரியர்களாக நியமிக்கப்படவில்லை. அவர்களை பணிநீக்கம் செய்ய வேண்டும் என அரசு தரப்பில் உத்தரவிடப்பட்டிருந்தது. அதன்படி, இந்த 56 பேரும் அரசின் […]
அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இருந்து,அரசுக் கல்லூரிகளுக்கு தற்காலிகமாக மாற்றப்பட்ட 545 பேராசிரியர்களின் பணி நிரந்தரத்துக்கான அறிவிப்பு வருகின்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் வெளியாக உள்ளதாக தகவல். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இருந்து,அரசுக் கல்லூரிகளுக்கு தற்காலிகமாக மாற்றப்பட்ட 545 பேராசிரியர்களை,தற்போது பணியாற்றி வரும் கல்லூரிகளிலேயே நிரந்தரமாக பணியமர்த்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன் அடிப்படையில்,பேராசிரியர்கள் பணியாற்றி வரும் கல்லூரிகளின் விவரங்களை,அனுப்பி வைக்க கல்லூரிக் கல்வி இயக்குநரகத்துக்கு தமிழக அரசின் உயர்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனைத் தொடர்ந்து,வருகின்ற பட்ஜெட் […]
அண்ணாமலை பல்கலை.பேராசிரியர்களுக்கு ஏழாவது குழு ஊதியத்தை வழங்க சிறப்பு நிதியையும் தமிழக அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் நிதி நெருக்கடி தீர்ந்த பிறகு தான் அதன் பேராசிரியர்களுக்கு ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் செயல்படுத்தப்படும் என்றால் அது எந்தக் காலத்திலும் நடக்க வாய்ப்பில்லை என்றும்,இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியர்களுக்கு ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகளை செயல்படுத்தும்படி பல்கலைக்கழக நிர்வாகத்தை அறிவுறுத்த வேண்டும்,அதற்குத் தேவைப்படும் […]
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக புதிய துணைவேந்தராக கதிரேசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். துணைவேந்தர் பதவியில் 3 ஆண்டுகள் இருப்பார்கள் என்று ஆளுநர் அறிவித்துள்ளார். துணை வேந்தராக நியமிக்கப்பட்டுள்ள கதிரேசன் ஆசிரியர் பணியில் 36 ஆண்டுகாலம் அனுபவம் உள்ளவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பல்வேறு துறைகளில் கதிரேசன் தலைவராகப் பொறுப்பு வகித்தவர். மத்திய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தின் இயக்குநராகவும் ஆர்.எம் கதிரேசன் இருந்துள்ளார்.
அண்ணாமலை பல்கலைக்கழகம் தொழிற்படிப்புகளை வழங்க தடை கோரிய வழக்கில் தமிழ்நாடு அரசு பதில் தர உத்தரவு. சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார். அதில், பல்கலைக்கழக மானியக் குழு விதிகளை மீறி அண்ணாமலை பல்கலைக்கழகம் தொழிற்படிப்புகளை வழங்குவதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, தொழிற்படிப்புகளை வழங்க தடை கோரிய வழக்கில் தமிழ்நாடு அரசு, அண்ணாமலை பல்கலைக்கழகம், பல்கலை.மானியக் குழுவும் பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன், ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை இணைக்கும் சட்ட முன்வடிவு நாளை சட்டபேரவையில் தாக்கல். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் விழுப்புரத்தில் அமைந்துள்ள மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெயரில் உள்ள பல்கலைக்கழகத்தை இணைக்கும் சட்ட முன்வடிவு நாளை சட்டபேரவையில் தாக்கலாகிறது. தமிழக சட்டப்பேரவையில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சட்ட முன்வடிவை நாளை தாக்கல் செய்கிறார். தமிழ்நாடு பல்கலைக்கழக சட்ட திருத்தத்திற்கான சட்டமுன்வடிவு நாளை தாக்கல் செய்யப்படுகிறது. கடந்த சட்டப்பேரவையில், ஜெயலலிதா பல்கலைக்கழகம், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்படும் […]
அண்ணா பல்கலைக்கழகம் செமஸ்டர் தேர்வு முடிவு நாளைக்குள் வெளியிடப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இன்று பள்ளிக்கல்வித்துறை, உயர்கல்வித்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில்,அண்ணா பல்கலைக்கழகம் செமஸ்டர் தேர்வு முடிவு நாளைக்குள் வெளியிடப்படும் என்றும்,சிவில், மெக்கானிக்கல் உள்ளிட்ட பொறியியல் படிப்புகள் தமிழ் வழியில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். மேலும்,இது தொடர்பாக அமைச்சர் கூறியதாவது: “விருதுநகர்,தாராபுரம், ஆலங்குடி, கூத்தாநல்லூர், சேர்க்காடு,திருச்சுழி, கள்ளக்குறிச்சி,திருக்கோயிலூர், தர்மபுரி ஏரியூர், […]
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் செயல்பட்டு வரும் அண்ணாமலை பல்கலை கழக கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வரும் மாணவி தான் சுசித்ரா. இந்த மாணவி மீது சக மாணவன் முத்தமிழ், ஆசீட் வீசி உள்ளான். இதனை கண்ட கல்லூரி மாணவர்கள் முத்தமிழை பலமாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த முத்தமிழ் மற்றும் அசீட் வீச்சிற்கு உள்ளான சுசித்ரா ஆகிய இருவரும் சிதம்பரம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து […]
பல்கலை கழகதிற்கு உட்பட்ட மருத்துவ கல்லூரிகளில் அதிகமாக கட்டணம் வசூலிப்பதாக மாணவர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த வழக்கினை விசாரித்த உச்ச நீதிமன்றம் அண்ணாமலை பல்கலைக்கழக துணை வேந்தர் நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், அண்ணா பல்கலைக்கழக பதிவாளரும் ஜூன் 8இல் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. DINASUVADU
ஆந்திர மாநிலத்தின் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி திரு. ராமுலு என்பவரை தமிழக ஆளுநர் திரு. பன்வாரிலால் புரோகித் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தருக்கான தேடுதல் குழுவின் உறுப்பினராக நியமனம் செய்துள்ளார். முன்னாள் நீதிபதி ராமுலு அவர்கள் ஆந்திர பிரதேச உயர்நீதி மன்றத்தில் மூத்த வழக்கறிஞராகவும் பின்னர் உயர்நீதிமன்ற நீதிபதியாகவும் பணியாற்றியுள்ளார். தமிழக ஆளுநரால் தேர்வு செய்யப்பட்ட அந்த தேர்வு குழுவில் பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர், முனைவர் ஊ.தங்கமுத்து, பல்கலைக்கழக பேரவை பிரதிநிதியாகவும், திரு.எஸ்.பி.இளங்கோவன், இ.ஆ.ப., […]