அண்ணாமலை உருவ பொம்மை எரிப்பு – அண்ணாமலை ட்வீட்

கடலூரில் அண்ணாமலையை கண்டித்து போராட்டம் நடைபெற்ற நிலையில், இதுகுறித்து அண்ணாமலை ட்வீட் செய்துள்ளார்.

கடலூரில் அண்ணாமலையை கண்டித்து போராட்டம் நடைபெற்ற நிலையில், இதுகுறித்து அண்ணாமலை ட்வீட் செய்துள்ளார்.

இன்று கடலூர் மாநகர திமுக சார்பில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை கண்டித்து போராட்டம் நடைபெற்ற நிலையில், இந்த போராட்டத்தில் அண்ணாமலையின் உருவ பொம்மை எரிக்கப்பட்டது.

இதுகுறித்து அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், ‘எனது உருவ பொம்மையை ஊர்வலமாக எடுத்துச் சென்று எரித்து நேரத்தை வீணடிக்காமல், கோவை குண்டுவெடிப்பு பற்றி உங்கள் கட்சித் தலைவர் மற்றும் தமிழக முதல்வர்அவர்களை பேச சொல்லுங்கள் என்று திமுகவினரை கேட்டுக்கொள்கிறேன். அதுவே தமிழக மக்களுக்கு அவர் ஆற்றும் பெரும் சேவையாக இருக்கும்.’ என பதிவிட்டுள்ளார்.

unknown node