#ELECTION BREAKING : மார்ச்7-ல் அமித்ஷா; 10-ல் ஜே.பி.நட்டா தமிழகம் வருகை..!

Home Minister Amit Shah and BJP national leader JP Natta visit Tamil Nadu for election campaign.

தேர்தல் பரப்புரைக்காக உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தமிழகம் வருகை.

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் வருகின்ற 12-ம் தேதி நடைபெற உள்ளது. இதனால், அனைத்து கட்சிகளும் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து தீவிர பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், தேர்தல் பரப்புரைக்காக மார்ச் 7-ஆம் தேதி உள்துறை அமைச்சர் அமித்ஷா மீண்டும் தமிழகம் வருகிறார். இவரை தொடர்ந்து, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வரும் 10-ஆம் தேதி தேர்தல் பிரச்சாரத்திற்காக தமிழகம் வருகை தரவுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை புதுச்சேரி, காரைக்கால்  மற்றும் விழுப்புரத்தில் பரப்புரையை மேற்கொண்ட அமித்ஷா மீண்டும் பரப்புரைக்காக வருகை தரவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

#ELECTION BREAKING : மார்ச்7-ல் அமித்ஷா; 10-ல் ஜே.பி.நட்டா தமிழகம் வருகை..!