போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர காலில் விழுந்த காவல் கண்காணிப்பாளர்... அதிரவைக்கும் சம்பவம்..

இந்த   போராட்டத்தில்  ஈடுபட்ட  பெண்கள் மீது காவல் துறையினர்  தாக்குதல் நடத்தியதாகவும், பெண்களை கைது செய்ததாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து அந்த பகுதியில்

ஆந்திர மாநிலத்தில் புதிதாக முதல்வராக பதவியேற்ற ஜெகன் மோகன் ஆந்திராவின் தலைநகராக அமராவதி இருக்காது என்றும்  ஆந்திராவிற்க்கு மூன்று தலைநகரம் உருவாக்கப்படும் என்று அதிரடியாக அறிவித்தார்.

இந்த அறிவிப்பிற்க்கு எதிர்ப்பு தெரிவித்தும் அமராவதியை தலைநகரமாக அறிவிக்கக்கோரியும் பொதுமக்கள் சார்பில் போராட்டம் நடந்தது.

இந்த   போராட்டத்தில்  ஈடுபட்ட  பெண்கள் மீது காவல் துறையினர்  தாக்குதல் நடத்தியதாகவும், பெண்களை கைது செய்ததாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து அந்த பகுதியில் காவல்துறைக்கு அப்பகுதி மக்கள் யாரும்  ஒத்துழைப்பு அளிக்கக்கூடாது என அமராவதியில் முடிவு செய்த விவசாயிகள், கடையடைப்பு போராட்டத்துக்கும் அழைப்பு விடுத்தனர்.

unknown node

இந்த போராட்டத்திற்க்கு  பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவலர்களுக்கு குடிக்க தண்ணீர் கூட அளிக்கக்கூடாது என கிராம மக்கள் முடிவு செய்தனர். மேலும், சாலை மறியல் போராட்டங்களும் நடத்தப்பட்டன. எனவே நிலைமை சிக்கலானதைத் தொடர்ந்து, ஒத்துழைப்பு அளிக்க வேண்டியும் போராட்டத்தை கைவிடக்கோரியும்  காவல்துறை அதிகாரிகள் தங்கள் சீருடையிலேயே போராட்டத்தை கைவிடக்கோரி மக்களின் கால்களைத் தொட்டு வணங்கினர். இந்த சம்பவம் ஒட்டு மொத்த இந்தியாவையுமே திரும்பி பார்க்க செய்துள்ளது.