அண்மையில் காஷ்மீர் விவகாரம் மற்றும் குடியுரிமை திருத்த சட்டம் ஆகியவற்றுக்கு எதிராக மலேசிய பிரதமர் மகாதீர் முகமது இந்தியாவை கடுமையாக விமர்சனம் செய்து இருந்தார். மலேசிய இறக்குமதிப்பொருள்களுக்கு அதிக கட்டுப்பாடுகள் விதித்து அதிரடி. இந்த விமர்சனத்திற்க்கு இந்திய தரப்பில் அதிருப்தி தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மலேசியாவில் இருந்து இறக்குமதியாகும் பாமாயில் எண்ணெய் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு மத்திய அரசு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்த இறக்குமதி தடையால் மலேசியாவுக்கு பொருளாதார ரீதியாக அதிக பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் […]
மத்திய பாரதிய ஜனதா அரசின் கொள்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து மத்திய தொழிற்சங்கங்கள் இனைந்து ஜனவரி 8 அதாவது நாளை நாடு தழுவிய அளவில் “பாரத் பந்த்” நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்படும் என எதிர்பார்ப்பு. இந்த பாரத் பந்த் குறித்து அறிவித்துள்ள தொழிற்சங்கங்கள், மத்திய அரசின் தொழிலாளர் விரோத, மக்கள் விரோத, தேசவிரோத கொள்கைகளை கண்டித்து இன்று நாடு தழுவிய அளவில் வேலைநிறுத்த போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த […]
தலைநகர் டெல்லியில் உள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் ஆசிரியர் சங்கம் சார்பில் பொதுக்கூட்டம் ஒன்று நடந்தது. அப்போது, அங்கு முகத்தை மூடி துனியை அணிந்து வந்த மா்ம நபர்கள் இரும்பு கம்பி, கம்பு போன்ற பயங்கர ஆயுதங்களால் மாணவர்களை சரமாரியாக கொடூரமாக தாக்கினர். இந்த கொடூர தாக்குதலில் பல மாணவர்கள் காயம் அடைந்தனர். இந்த மாணவர்கள் மீதான இந்த கொலைவெறி தாக்குதல் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த […]
ஆந்திர மாநிலத்தில் புதிதாக முதல்வராக பதவியேற்ற ஜெகன் மோகன் ஆந்திராவின் தலைநகராக அமராவதி இருக்காது என்றும் ஆந்திராவிற்க்கு மூன்று தலைநகரம் உருவாக்கப்படும் என்று அதிரடியாக அறிவித்தார். இந்த அறிவிப்பிற்க்கு எதிர்ப்பு தெரிவித்தும் அமராவதியை தலைநகரமாக அறிவிக்கக்கோரியும் பொதுமக்கள் சார்பில் போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மீது காவல் துறையினர் தாக்குதல் நடத்தியதாகவும், பெண்களை கைது செய்ததாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து அந்த பகுதியில் காவல்துறைக்கு அப்பகுதி மக்கள் யாரும் ஒத்துழைப்பு அளிக்கக்கூடாது என அமராவதியில் முடிவு […]
ராஜஸ்தான் மாநிலம் கோடா பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் பிறந்த பச்சிளங்குழந்தைகள் அதிக அளவில் உயிரிழப்பதாக புகார்கள் வந்தன. இதையடுத்து, மருத்துவமனையில் குழு அமைத்து விசாரணை நடைபெற்றது. இந்நிலையில் தற்போது மீண்டும் குழந்தைகள் உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது. கடந்த டிசம்பர் மாதத்தில் மட்டும் 77 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாகவும், சராசரியாக நாள் ஒன்றுக்கு 3 குழந்தைகள் பிறந்த உடனே உயிரிழப்பதாக அந்த விசாரனை அமைப்பு அளித்த அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகி உள்ளது.இந்த உயிரிழப்பிற்க்கு காரணம் மருத்துவமனையில் போதிய ஆக்சிஜன் […]
ஈரானின் இராணுவ தளபதியாக இருந்த குவாசெம் சுலைமானி அமெரிக்காவின் ஏவுகனை தாக்குதலில் கொல்லப்பட்டார். இந்த விவகாரத்தில் இந்தியாவையும் சேர்க்கும் அமெரிக்கா. இந்த தாக்குதல் குறித்து விளக்கம் அளித்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியிருப்பதாவது, சுலைமானியை கொன்றதன் மூலம், அவரது பயங்கரவாத சாம்ராஜ்யத்திற்கு முடிவு கட்டப்பட்டுள்ளது என்றும், சுலைமானியின் பயங்கரவாத செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மரியாதை செய்யப்பட்டுள்ளது என்றும் ட்ரம்ப் கூறினார். மேலும் இந்த தாக்குதல் போர் ஏற்படுவதற்க்கு அல்ல, போர் ஏற்படாமல் இருப்பதற்க்கு என்றும் குறிப்பிட்டார். மேலும் அவர், […]
இந்தியா எங்கள் நாடு இல்லை, சென்னையில் தடாலடி . சீமானின் சர்ச்சை கருத்து. பாரத மாதா கீ ஜே என்பவர்களே இந்தியாவில் வாழ முடியும் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியிருந்தார். இது தொடர்பாக சீமானிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் அளித்த பதிலில், நாங்கள் பாரத மாதாவின் பிள்ளைகள் அல்ல. தமிழ்த் தாயின் பிள்ளைகள் நாங்கள். எங்களால் பாரத் மாதா கீ ஜே என சொல்ல மாட்டோம், தமிழ்த்தாய் வாழ்க என்றே கூறுவோம். இந்தியாவில் பிரதேசங்களுக்கு […]
இந்திய தேச தந்தையின் சிலையை சிதைப்பு. இந்திய மக்களிடையே பெரும் பரபரப்பு. இந்திய தேச தந்தை மகாத்மா காந்தியடிகளின் சிலை தகர்க்கப்பட்டது இந்திய மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலத்தின் அம்ரேலியில் மகாத்மா காந்தியடிகள் சிலையை சமூக விரோதிகள் தகர்த்துள்ளதாக தற்போது தகவல் வந்துள்ளது. அம்ரேலி மாவட்டத்தில் ஹரி கிருஷ்ணா என்ற ஏரியில் மகாத்மா காந்தி சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்த சிலை சூரத் தொழிலதிபர் ஒருவரின் அறக்கட்டளை மூலம் நிறுவப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சிலையை […]
பாகிஸ்தானில் சீக்கிய குருத்வாராவில் கொலைவெறி தாக்குதல். இந்திய தலைவர்கள் கடும் கண்டனம். சீக்கிய மதத்தை தோற்றுவித்தவரான சீக்கிய மதகுருவான குருநானக் சிங், நம் அண்டை நாடான பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள நன்கானா சாகிப் என்ற இடத்தில் பிறந்தாா். அவரது நினைவாக அங்கு அவருக்கு குருத்வாரா கட்டப்பட்டுள்ளது. அங்கு முக்கிய விழாக்கள் வெகு விமர்சையாக கொண்டாடப்படும். இந்நிலையில், அந்தப் பகுதியைச் சோ்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோா் நேற்று அந்த குருத்வாரா மீதும், அங்கு வந்த சீக்கிய […]
தவறான வீடியோவை பகிர்ந்த புதுச்சேரி ஆளுநர். புதுச்சேரி ஆளுநரை புரட்டியெடுக்கும் நெட்டிசங்கள். நாம் அனைவரும் சமூக வலைதளங்களான வாட்ஸ்-அப், பேஸ்புக் உள்ளிட்ட ஊடகங்கள் வழியாக கிடைக்கும் தகவல்களை, சிறிதும் யோசிக்காமலும், சரிபார்க்காமலும், உண்மை என நம்பி, அப்படியே அதனை பிறருக்கும் பரப்புவதை, பலரும் செய்கின்றனர்.இந்நிலையில், புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடி, தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவிட்டிருந்தார். அந்த வீடியோவில், சூரியனில் இருந்து வெளிப்படும் சப்தமானது ஓம் என்ற ஒலியுடன் ஓம் மந்திரத்தை […]
அடுத்த வழக்கில் சிக்கும் முன்னால் நிதி அமைச்சர் ப.சிதம்பரம். அமலாக்கத்துறை அதிரடி விசாரனை. ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னால் நிதி அமைச்சர் ப. சிதம்பரம் மீது சிபிஐ மற்றும் அமலாக்கப் பிரிவு ஆகியவை வழக்கு தொடர்ந்திருந்தன. இந்த வழக்குகளில் 3 மாதங்களுக்கு மேல் தலைநகர் டெல்லியில் உள்ள திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் முன்னால் நிதி அமைச்சர் ப. சிதம்பரம். இவர் தற்போது இந்த வழக்கில் இருந்து ஜாமீனில் வெளிவந்துள்ள முன்னால் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்திடம் ஏர் […]
தேசிய குடியுரிமை திருத்த விவகாரம் எதிரொலி. காங்கிரஸ் ஆட்சியில் ஆட்சியில் இருக்கும் வரை மத்தியப் பிரதேசத மாநிலத்தில் தேசியக் குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி) மற்றும் குடியுரிமைத் திருத்தச் சட்டம் (சிஏஏ) அமல்படுத்தப்பட மாட்டோம் என அம்மாநில முதல்வர் கமல்நாத் தெரிவித்துள்ளார். மத்தியப் பிரதேசத்தில் அந்த மாநில முதல்வர் கமல்நாத் தலைமையில் தேசிய குடியுரிமைத் திருத்தச் சட்டம் மற்றும் என்ஆர்சி-க்கு எதிராக இன்று புதன்கிழமை பேரணி நடைபெற்றது. இதையடுத்து, மத்தியப் பிரதேசத்தில் குடியுரிமைத் திருத்தச் சட்டம் மற்றும் என்ஆர்சி […]
புதுச்சேரி பல்கலைகழகத்தின் 27-வது பட்டமளிப்பு விழாவில் இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். தங்கப்பதக்கத்தை மறுத்த மாணவியால் பரபரப்பு. இந்த பட்டமளிப்பு விழாவில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, முதலமைச்சர் நாராயணசாமி, பல்கலைக்கழக துணைவேந்தர் குர்மீத்சிங் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதற்கு முன்னதாக இந்த பட்டமளிப்பு விழாவிற்கு வந்த சந்தேகப்படும் வகையில் இருந்த ஒரு மாணவர் மற்றும் ஒரு மாணவியை பாதுகாப்பு அதிகாரிகள் வெளியே அழைத்து விசாரித்த பின்னர் அந்த மாணவர்களை உள்ளே அனுமதித்தனர். […]
தேசிய குடியுரிமை சட்ட மசோதா விவகாரத்தில் இந்தியா முழுவதும் எதிர்கட்சிகளும் முஸ்லீம் அமைப்புகளும் பெரும் போராட்டத்தை கையில் எடுத்தனர். இந்நிலையில் இந்த சட்டத்திற்க்கு இந்திய அளவில் அதிகமக்கள் ஆதரவு என்ற செய்தி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்தியா முழுவதும் 65.4 %மக்களும்,வண்முறை அதிகம் நடைபெற்ற்ற அசாமில் மட்டும் 76.9 சதவீதம் பேர் என்.ஆர்.சி., எனப்படும் தேசிய குடியுரிமை பதிவு நடைமுறைப்படுத்துவதை ஆதரிப்பதாக ஐ.ஏ.என்.எஸ்., மற்றும் சி.ஓட்டர் நடத்திய கருத்துக்கணிப்பில் தற்போது தெரியவந்துள்ளது. இவை நாடு முழுவதும் சுமார் […]
இந்திய நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குடியுரிமை திருத்த மசோதா இரண்டு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டதிருத்தத்திற்க்கு மலேசிய பிரதமரி காட்டமான கருத்து. இந்த மசோதாவிற்க்கு எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் தாண்டி இந்த மசோதா சட்டமாக்கப்பட்டது. இந்த மசோதா தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் வலுத்து வரும் நிலையில், நாட்டின் தலைநகர் டெல்லி உள்பட நாட்டின் பல முக்கிய பகுதிகளிலும் தொடர் போராட்டங்களும் கண்டன ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்று வருகின்றன. இந்தநிலையில் நேற்று உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் […]
குடியுரிமை திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம். இந்த போராட்டத்தில் துப்பாக்கிச்சூட்டில் இருவர் பலியானதால் பதற்றம். இந்தியாவின் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தேசிய குடியுரிமை திருத்த மசோதாவிற்க்கு இந்தியா முழுவதும் எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகிறது. இந்த போராட்டங்கள் வண்முறையாக மாறிவரும் நிலயில் காவல்துறையினர் கட்டுப்படுத்த கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் சட்டம் ஒழுங்கை கட்டுப்படுத்துவதில் முழுகவனம் செலுத்திவருகிறது. இந்நிலையில், கர்நாடாக மாநிலம் மங்களூருவில் இந்த சட்டத்திற்க்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். இதில் போராட்டக்காரர்கள் மீது […]
தேசிய குடியுரிமை திருத்த மசோதா விவகாரத்தில் மாணவர்கள் போராட்டத்திற்கு எதிர்ப்பு. அதே பல்கலைகழக மானவர்கள் இம்மசோதாவிற்க்கு ஆதரவாக போராட்டம். தேசிய குடியுரிமை திருத்த மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து வடகிழக்கு மாநில மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் டெல்லியில் உள்ள பல்கலைகழகங்களில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த கலவரத்தை கட்டுப்படுத்த காவல்துறையினர் மாணவர்கள் மீது தடியடி நடத்தினர். பல்கலைக்கழகத்திற்குள் அதிரடியாக போலீசார் நுழைந்து மாணவர்களை அத்துமீறி தாக்கியதாக […]
இந்திய நாடாளுமன்றத்தில் தற்போது நிறைவேற்றப்பட்ட தேசிய குடியுரிமை திருத்த சட்டம் குறித்து பாக்கிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறிய கருத்திற்கு பதிலடி. இதுகுறித்த இந்திய வெளியுறவு அமைச்சகம் தக்க பதிலடி. இந்திய நாடாளுமன்றத்தில் தற்போது நிறைவேற்றப்பட்ட தேசிய குடியுரிமை திருத்த சட்டம் அண்டை நாடுகளான பாகிஸ்தான், வங்காளதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் மத ரீதியிலான துன்புறுத்தளுக்கு ஆளாகி,கடந்த 2014ம் ஆண்டு வரை இந்தியாவிற்குள் அடைக்கலம் புகுந்த இஸ்லாமியர்கள் அல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்குவதற்காக இந்த சட்டம் வழி […]
இந்திய நாடாளுமன்ற இரு அவைகளிலும், பலத்த எதிர்ப்புக்கு இடையே குடியுரிமை சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டு, குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்குப் பிறகு இந்த மசோதா சட்டமானது. இந்தமசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து மே.வங்க முதல்வர் ஆவேச கருத்து. இந்த குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு வடகிழக்கு மாநிலங்கலான அசாம், திரிபுரா உள்ளிட்ட மாநிலங்கள் மற்றும் டெல்லி, அலிகார் உள்ளிட்ட முக்கய நகரங்களிலும் தற்போது போராட்டங்கள் வலுத்துள்ளன. இந்த போராட்டத்தின் விளைவாக மேற்கு வங்க மாநிலத்திலும் போராட்டம் தலை விரித்து ஆடுகிறது. இந்த […]
ராகுல்காந்தி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தேர்தல் ஆணையத்தில் பாஜக சார்பில் புகார் அளிப்பு. காங்கிரஸ் தொண்டர்கள் அதிர்ப்தி. ராகுல்காந்தி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தேர்தல் ஆணையத்தில் பாஜக சார்பில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி புகார் மனு. #MakeInIndia என்ற பிரதமர் மோடியின் திட்டத்தை Rape In India என்று ராகுல் காந்தி பேசியிருந்தார்.எனவே இந்த பேச்சிற்க்கு பாஜக தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து சட்டப்படி நடவடிக்கை எடுப்பதாக தேர்தல் ஆணையம் உறுதி அளித்துள்ளது. […]