வீடியோ : கலைஞர் நினைவிடத்தில் அதிமுக தொண்டர்கள் மரியாதை...!

AIADMK volunteers who attended the inauguration ceremony of the late Chief Minister Jayalalithaa's memorial paid their respects by visiting the memorial of the late DMK leader Karunanidhi.

சென்னை மெரினா கடற்கரையில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடம் இன்று காலை துணை முதல்வர் ஓ .பன்னீர்செல்வம் முன்னிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

ஜெயலலிதா நினைவிடம் திறப்பு நிகழ்ச்சியில் அமைச்சர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர். மெரினா கடற்கரையில் 50,422 சதுர அடியில் ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவத்தில் நினைவிடம் கட்டப்பட்டுள்ளது. நினைவிடத்தில் “மக்களால் நான், மக்களுக்காக நான், அமைதி, வளம், வளர்ச்சி” ஆகியவை வாசகங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்வில் கலந்துக் கொள்ளத் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து அதிமுகவினர் குவிந்தனர். இந்நிலையில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிட திறப்பு விழாவுக்கு வந்த அதிமுக தொண்டர்கள் மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் நினைவிடத்தை பார்வையிட்டு மரியாதை செய்தனர்.

unknown node