அதிமுக அவைத்தலைவர் மதுசூதனனின் உடல் மின் மயானத்தில் தகனம்!!

The body of AIADMK leader Madhusudhanan, who passed away due to ill health, was cremated at the E-Cemetery yesterday.

உடல்நலக்குறைவால் நேற்று காலமான அதிமுக அவைத்தலைவர் மதுசூதனனின் உடல் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

அதிமுக அவைத் தலைவர் 80 வயதான மதுசூதனன் நேற்று உடல்நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் உயிரிழந்தார். பின்னர் தண்டையார் பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் மதுசூதனனின் உடல் வைக்கப்பட்டிருந்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி, சசிகலா உள்ளிட்ட கட்சி பிரமுகர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

இந்த நிலையில் உடல்நலக்குறைவால் நேற்று காலமான அதிமுக அவைத்தலைவர் மதுசூதனனின் உடல், மூலக்கொத்தளம் மின் மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், சற்றுமுன் தகனம் செய்யப்பட்டது. மறைந்த மதுசூதனனின் இறுதி ஊர்வலத்தில் ஓபிஎஸ், ஈபிஎஸ் மற்றும் அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர் என்பது குறிப்பிடப்படுகிறது.