11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழு ! அதிமுக பொதுக்குழுவில் ஒப்புதல்

TN Assembly Election 2021: AIADMK General council endorses the 11 member steering committee formed recently

அதிமுக பொதுக்குழுவில் வழிகாட்டுதல் குழுவுக்கு ஒப்புதல் அளித்து தீர்மானம் நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து முதல்வர் வேட்பாளர் மற்றும் வழிகாட்டுதல் குழுவில் இடம் பெறுபவர்கள் குறித்த அறிவித்தனர்.அதில்,11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவில் இடம் பெற்றவர்களின் பெயரை முதல்வர் அறிவித்தார்.திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார்,சி.வி.சண்முகம் , காமராஜ், ஜேசிடி பிரபாகரன், மனோஜ் பாண்டியன், மோகன்,கோபல கிருஷ்ணன் மற்றும் சோழவந்தான் மாணிக்கம் ஆகியோர் இடம்பெற்றனர்.

இந்நிலையில் இன்று நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் வழிகாட்டுதல் குழுவுக்கு ஒப்புதல் அளித்து தீர்மானம் நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது.