தினந்தோறும் பொய் அறிக்கை வெளியிடுவதை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாடிக்கையாக கொண்டுள்ளார் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று அதிமுகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது.இந்த கூட்டம் அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெற்று வரும் நிலையில் ,அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் ,இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி,பொதுக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.இதில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.குறிப்பாக மக்கள் மத்தியில் பெருகிவரும் ஆதரவை பொறுக்க முடியாமல் முதல்வர் பழனிசாமியை பக்குவமின்றி விமர்சித்து வரும் […]
அதிமுக பொதுக்குழுவில் வழிகாட்டுதல் குழுவுக்கு ஒப்புதல் அளித்து தீர்மானம் நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து முதல்வர் வேட்பாளர் மற்றும் வழிகாட்டுதல் குழுவில் இடம் பெறுபவர்கள் குறித்த அறிவித்தனர்.அதில்,11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவில் இடம் பெற்றவர்களின் பெயரை முதல்வர் அறிவித்தார்.திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார், சி.வி.சண்முகம் , காமராஜ், ஜேசிடி பிரபாகரன், மனோஜ் பாண்டியன், மோகன்,கோபல கிருஷ்ணன் மற்றும் […]
அதிமுக பொதுக்குழு, செயற்குழு சில மணி நேரங்கள் தாமதமாக கூட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டமன்ற தேர்தலுக்கு அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள தற்போதைய முதலமைச்சர் பழனிசாமி தேர்தலுக்கான பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். இந்த பரபரப்பான அரசியல் சூழலில் தான் இன்று அதிமுக பொதுக்குழு கூட உள்ளதாக அறிவிக்கப்பட்டது.இது தொடர்பாக ஏற்கனவே வெளியிட்ட அறிக்கையில், ஜனவரி 9-ஆம் தேதி காலை 8.50 மணிக்கு அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் ஸ்ரீவாரு வெங்கடாசலபதி […]
ஜனவரி 9-ஆம் தேதி அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் 7-ஆம் தேதி அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில், அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை அதிகாரபூர்வமாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார்.இதனைத்தொடர்ந்து அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தேர்தலுக்கு அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள தற்போதைய முதலமைச்சர் பழனிசாமி தேர்தலுக்கான பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். கடந்த 20-ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டத்தை கூட்டுவது குறித்து சென்னையில் ஒருங்கிணைப்பாளரும், […]