தாமதமாகும் அதிமுக பொதுக்குழு கூட்டம் ! முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்ற வாய்ப்பு

AIADMK general body and executive committee are reportedly a few hours late.With the Assembly elections approaching

அதிமுக பொதுக்குழு, செயற்குழு சில மணி நேரங்கள் தாமதமாக கூட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டமன்ற தேர்தலுக்கு அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள தற்போதைய முதலமைச்சர் பழனிசாமி தேர்தலுக்கான பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். இந்த பரபரப்பான அரசியல் சூழலில் தான் இன்று அதிமுக பொதுக்குழு கூட உள்ளதாக அறிவிக்கப்பட்டது.இது தொடர்பாக ஏற்கனவே வெளியிட்ட அறிக்கையில், ஜனவரி 9-ஆம் தேதி காலை 8.50 மணிக்கு அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் ஸ்ரீவாரு வெங்கடாசலபதி மண்டபத்தில் நடைபெறும் என்று ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான பழனிசாமி ஆகியோர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தனர்.

இந்நிலையில்சில மணி நேரங்கள் தாமதமாகஅதிமுகபொதுக்குழு மற்றும் செயற்குழு கூட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதாவதுஅதிமுகபொதுக்குழு செயற்குழு 11 மணிக்கு கூடும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதிமுகபொதுக்குழு மற்றும் செயற்குழுவில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட வாய்ப்பு எனத் தகவல் வெளியாகியுள்ளது.குறிப்பாக அண்மையில் அமைக்கப்பட்ட வழிகாட்டல் குழுவிற்கு என்னென்ன அதிகாரங்கள் என்பது குறித்து தீர்மானம் நிறைவேற்றபட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தாமதமாகும் அதிமுக பொதுக்குழு கூட்டம் ! முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்ற வாய்ப்பு