ஜூலை 11 அன்று நடைபெற்ற அதிமுக பொதுக்குழு – உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பு மேல்முறையீடு

ஜூலை 11 அன்று நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவுக்கு அனுமதி வழங்கிய சென்னை உயர் நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக ஓபிஎஸ் தரப்பு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு.

ஜூலை 11 அன்று நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவுக்கு அனுமதி வழங்கிய சென்னை உயர் நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக ஓபிஎஸ் தரப்பு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு.

கடந்த ஜூலை 11-ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக்கோரி, ஓபிஎஸ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால், இந்த வழக்கில் ஓபிஎஸ் கோரிக்கையை நிராகரித்து பொதுக்குழுவை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்து இருந்தது.

மேலும், கட்சி விதிகளுக்கு உட்பட்டு பொதுக்குழுவை நடத்த வேண்டும் என ஈபிஎஸ் தரப்புக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி உத்தரவிட்டு இருந்தார். அதனை தொடர்ந்து அதிமுக பொதுக்குழுவும் பரபரப்பாக நடந்து முடிந்தது.

இந்த நிலையில்,ஜூலை 11 அன்று நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவுக்கு அனுமதி வழங்கிய சென்னை உயர் நீதிமன்ற உத்தரவிற்கு எதிராகஉச்சநீதிமன்றத்தில்ஓபிஎஸ்தரப்புமேல்முறையீடு செய்துள்ளது.

ஜூலை 11 அன்று நடைபெற்ற அதிமுக பொதுக்குழு – உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பு மேல்முறையீடு