#BREAKING : அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடம் – மருத்துவமனை அறிக்கை

அமைச்சர் துரைக்கண்ணு உடல்நிலை தொடர்ந்து மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.

அமைச்சர் துரைக்கண்ணு உடல்நிலை தொடர்ந்து மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.

தமிழக வேளாண்த் துறை அமைச்சரான துரைக்கண்ணுவிற்கு கடந்த 13 ஆம் தேதி மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதன் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அப்போது அவருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று உறுதியானது. இதனைதொடர்ந்து சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் காவேரி மருத்துவமனை நிர்வாகம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.அந்த அறிக்கையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த தமிழ்நாடு வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு உடல்நிலை தொடர்ந்து மிகவும் கவலைக்கிடம் .துரைக்கண்ணுவின் முக்கிய உறுப்புகளை சீராக இயங்க வைக்கும் பணி சவாலானதாக உள்ளது.அடுத்த 24 மணி நேரத்திற்கு உடல் ஒத்துழைப்பு தருவதை பொறுத்தே அடுத்தகட்ட சிகிச்சை அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

unknown node