நரிக்குறவர் – குருவிக்காரர் சமூகத்தினர் பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்ப்பு..! முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்வீட்..!

சமூகத்தின் கண்ணியமான வாழ்க்கைக்கான அனைத்து நடவடிக்கைகளையும் நாங்கள் தொடர்ந்து மேற்கொள்வோம் என முதல்வர் ட்விட்.

சமூகத்தின் கண்ணியமான வாழ்க்கைக்கான அனைத்து நடவடிக்கைகளையும் நாங்கள் தொடர்ந்து மேற்கொள்வோம் என முதல்வர் ட்விட்.

தமிழ்நாட்டில் உள்ள நரிக்குறவர் – குருவிக்காரர் சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதற்கான அரசியல் சாசன திருத்த மசோதா நேற்று மக்களவையில் நிறைவேறியது.

இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில்,’பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு ஏற்கனவே  நரிக்குறவர் – குருவிக்காரர் சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதற்காக கடிதம் எழுதி இருந்தேன்.

எங்களது தொடர் முயற்சியின் விளைவாக மக்களவையில் இதற்கான மசோதா குறிப்பிடத்தக்க வகையில் நிறைவேற்றப்பட்டதை வரவேற்கிறோம். சமூகத்தின் கண்ணியமான வாழ்க்கைக்கான அனைத்து நடவடிக்கைகளையும் நாங்கள் தொடர்ந்து மேற்கொள்வோம்.’  என பதிவிட்டுள்ளார்.

unknown node