எடப்பாடி தொகுதியில் போட்டியிட இமான் அண்ணாச்சி விருப்ப மனு..!

Popular comedian Iman Annachi has filed a petition to contest for the DMK in Edappadi constituency.

எடப்பாடி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட பிரபல நகைச்சுவை நடிகர் இமான் அண்ணாச்சி விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார்.

சட்டமன்ற தேர்தலையொட்டி, தி.மு.க. சார்பில் வேட்பாளர்கள் விருப்ப மனு வினியோகம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் கடந்த 17-ந் தேதி தொடங்கியது. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கொளத்தூரிலும், சேப்பாக்கம் தொகுதியில் திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட கட்சி நிர்வாகிகள்  மனு தாக்கல் செய்துள்ளனர்.

இந்நிலையில், எடப்பாடி தொகுதியில் முதல்வர் பழனிசாமியை எதிர்த்து திமுக சார்பில் போட்டியிட பிரபல நகைச்சுவை நடிகர் இமான் அண்ணாச்சி விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார்.