கொல்லிமலை மிளகு, பண்ருட்டி பலா, பொன்னி அரிசி போன்ற பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை – அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம்..!

Action to get geo-code for products like Kollimalai pepper, Panruti jack, Ponni rice - Minister MRK Panneerselvam ..!

கொல்லிமலை மிளகு போன்ற சிறப்பு பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற அரசு நடவடிக்கை எடுக்கும் என்று அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் முதன்முறையாக தனி வேளாண் பட்ஜெட்டை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.அதில்,பல முக்கிய அம்சங்கள் இடம் பெற்றன.

இதற்கிடையில்,கொல்லிமலை மிளகு போன்ற சிறப்பு பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற அரசு நடவடிக்கை எடுக்கும் என்று அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.மேலும்,இது தொடர்பாக அவர் கூறியதாவது:

“ஈரோடு மஞ்சள்,மதுரை மல்லி போன்ற தமிழகத்திற்கே உரிய சிறப்பு பயிர் ரகங்களுக்கு புவிசார் குறியீடு பெறப்பட்டு உலகளாகிய சந்தையில் அவற்றின் மதிப்பு உயர்ந்துள்ளது.

இதுபோன்று கொல்லிமலை மிளகு, பண்ருட்டி பலா, பொன்னி அரிசி போன்ற சிறப்பு விளை பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற அரசு நடவடிக்கை எடுக்கும்.இதன்மூலம்,இதனை உற்பத்தி செய்யும் விவசாயிகள் அதிக லாபம் பெறுவார்கள்.இத்திட்டம் ரூ.50 லட்சம் செலவில் மாநில அரசின் நிதியில் செயல்படுத்தப்படும்”,என்று வேளாண்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தெரிவித்தார்.