மறைமுக தேர்தலின் போது திமுக தலைமையின் உத்தரவை மீறி செயல்பட்ட வேலூர் மேற்கு மாவட்டம் ஆம்பூர் நகர செயலாளர் எம்.ஆர்.ஆறுமுகத்தை திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கம் செய்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்தார். இந்நிலையில் தனது செயலுக்கு எம்.ஆர்.ஆறுமுகம் வருத்தம் தெரிவித்ததால் அவர் மீதான ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்வதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், வேலூர் மேற்கு மாவட்டம், ஆம்பூர் நகரக் கழகச் செயலாளர் எம்.ஆர்.ஆறுமுகம், தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து மீண்டும் திமுகவில் பணியாற்ற அனுமதிக் கோரி திமுக தலைவர் அவர்களிடம் வைத்த கோரிக்கையினை ஏற்று, அவர் மீதான ஒழுங்கு நடவடிக்கை இன்று முதல் ரத்து செய்யப் பட்டு, ஆம்பூர் நகரச் செயலாளராக தொடர்ந்து பணியாற்ற அனுமதிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
unknown node