பள்ளி கட்டடங்களின் உறுதி தன்மை குறித்து ஆய்வு நடத்தப்படும் – அமைச்சர் அன்பில் மகேஷ்

இந்த சம்பவம் குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் கூறுகையில், ' தமிழகத்தில் பள்ளி கட்டடங்களின் உறுதி தன்மை பற்றி உடனடியாக ஆய்வு

தமிழகத்தில் பள்ளி கட்டடங்களின் உறுதி தன்மை பற்றி உடனடியாக ஆய்வு நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நெல்லையில் எஸ்.என்.ஹைரோட்டில் பொருட்காட்சி திடல் அருகே  உள்ள தனியார் பள்ளியான சாஃப்டர் மேல்நிலைப்பள்ளியின் கழிப்பறை சுவர்  இடிந்து விழுந்ததில், 3 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் காயமடைந்த 4 மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், விபத்தில் சிக்கி உயிரிழந்த விஸ்வரஞ்சன், சதீஷ், அன்பழகன் ஆகிய 3 மாணவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சமும், காயமடைந்த 4 மாணவர்களுக்கு தலா ரூ.3 லட்சமும் நிதி உதவி வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் கூறுகையில், ‘ தமிழகத்தில் பள்ளி கட்டடங்களின் உறுதி தன்மை பற்றி உடனடியாக ஆய்வு நடத்தப்படும் என்றும், பள்ளியின் கழிவறை சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் துரதிஷ்டவசமானது என்றும் தெரிவித்துள்ளார்.