#Breaking:ஜூன் மாதம் முதல் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 13 மளிகை தொகுப்பு – முதல்வர் ஸ்டாலின் ...!

A package of 13 groceries for all rice family cardholders from June - Chief Minister Stalin

ஜூன் மாதம் முதல் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 13 மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது . இந்நிலையில், மே 10-ம் தேதி முதல் 24ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

மக்கள் இந்த தளர்வுகளை பயன்படுத்தி அலட்சியமாக வெளியே சுற்றுவதால், 24-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

இந்த ஊரடங்கு மே 31-ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், மேலும், ஒரு வாரத்திற்கு, ஜூன் 7-ம் தேதி காலை 6 மணி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்,முதல்வர் ஸ்டாலின் அவர்கள்,அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் 13 மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படும் என்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மேலும்,இதுகுறித்து அந்த அறிக்கையில் முதல்வர் ஸ்டாலின் கூறியிருப்பதாவது,”பொதுமக்களின் சிரமத்தை குறைக்கும் வகையில்,13 மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பினை அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலைக் கடைகள் மூலம்,வரும் ஜூன் மாதம் முதல் வழங்கிட,கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறைக்கு உத்தரவிட்டுள்ளேன்”,என்று தெரிவித்துள்ளார்.

#Breaking:ஜூன் மாதம் முதல் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 13 மளிகை தொகுப்பு – முதல்வர் ஸ்டாலின் ...!