கொரோனா தொற்று உள்ளவர்கள் வெளியே சுற்றினால் 2000 ரூபாய் அபராதம் -சென்னை மாநகராட்சி

A fine of 2000 rupees if the corona is damaged and driven outside - Chennai Corporation

கொரனோ தொற்று ஏற்பட்டு வீட்டு தனிமையில் இருப்பவர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் வீடுகளை விட்டு வெளியே வருவது கண்டறியப்பட்டால்  2000 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையாளர் திரு.ககன் தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

கொரோனா பாதிக்கப்பட்டு வீட்டு தனிமையில் உள்ளவர்கள் அடிக்கடி வெளியே வருவதாக புகார்கள் வருகின்றன.இதனையடுத்து கொரோனா பாதித்த நபர்கள் மற்றும் அவர்கள் வீட்டில் உள்ளவர்கள் வெளியே சுற்றினால் அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இவ்வாறு வெளியே சுற்றினால் முதல் தடகையாக ரூ.2000/- அபராதுமாக விதிக்கப்படும் , இரண்டாவது தடவை மீண்டும் வீடுகளை விட்டு வெளியில் வருவது கண்டறியப்பட்டால் அவர்களை பெருநகர சென்னை மாநகராட்சியால் நடத்தப்படும் கொரோனா பாதுகாப்பு மையங்களில் (COVID CARE CENTRE) தங்க வைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மருத்துவர்களின் ஆலோசனையின்படி தொற்று பாதிப்பு தொற்று உறுதி குறைவாக உள்ள செய்யப்பட்டு  நபர்கள் அவர்களது வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு , தேவையான உணவுப் பொருட்கள், மருந்துகள் போன்ற அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய பெருநகர சென்னை மாநகராட்சியால் 2000க்கும் மேற்பட்ட முன்கள தன்னார்வலர்கள் (Focus Volunteers) பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

வீடுகளை விட்டு வெளியே வரும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தார் குறித்த விவரங்களை அருகாமையில் வசிப்பவர்கள் மற்றும் ஏனையோர் 044-25384520 என்ற தொலைபேசி எண்ணில் புகாராக அளிக்கலாம்.

unknown node