கொரனோ தொற்று ஏற்பட்டு வீட்டு தனிமையில் இருப்பவர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் வீடுகளை விட்டு வெளியே வருவது கண்டறியப்பட்டால் 2000 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையாளர் திரு.ககன் தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார். கொரோனா பாதிக்கப்பட்டு வீட்டு தனிமையில் உள்ளவர்கள் அடிக்கடி வெளியே வருவதாக புகார்கள் வருகின்றன.இதனையடுத்து கொரோனா பாதித்த நபர்கள் மற்றும் அவர்கள் வீட்டில் உள்ளவர்கள் வெளியே சுற்றினால் அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இவ்வாறு வெளியே சுற்றினால் […]