"உள்ளாட்சி தேர்தல்.... திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளிக்கலாம்" – திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு ..!

9 District Rural Local Elections .... You can submit a petition to contest on behalf of DMK ..!

9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக சார்பில் விருப்ப மனு அளிக்கலாம் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

தமிழக்தில் புதிதாக அமைக்கப்பட்ட வேலூர், நெல்லை, விழுப்புரம், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, தென்காசி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9 ஆம் தேதி என இரண்டு கட்டமாக நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார் அறிவித்துள்ளார்.

இதனையடுத்து, இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று முதல் தொடங்குகிறது. வருகிற 22-ந் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வேட்பு மனுக்கள் பெறப்படும். 23-ந் தேதி காலை 10 மணிக்கு வேட்பு மனு பரிசீலனை செய்யப்படும். 25-ந் தேதி பிற்பகல் 3 மணி வரை வேட்பு மனுவை திரும்ப பெற்று கொள்ளலாம். மேலும், ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை, அக்டோபர் 12ம் தேதி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்,9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில்திமுகசார்பில்போட்டியிட விரும்புவோர்விருப்பமனுஅளிக்கலாம் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.அதன்படி,கட்டணத் தொகை மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினருக்கு ரூ.10,000 எனவும்,ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினருக்கு ரூ.5000 எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி,விருப்ப மனுக்களை திமுக மாவட்டச் செயலாளரிடமோ அல்லது அண்ணா அறிவாலயத்திலோ ஒப்படைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.