தமிழக சட்டப்பேரவையில் இன்று இறுதி நாள் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் பட்ஜெட் மீதான விவாதம் மற்றும் உறுப்பினர்களின் கேள்விக்கு துறை அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர். அப்போது எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி இன்று கவனஈர்ப்பு தீர்மானத்தை சட்டப்பேரவையில் கொண்டு வந்தார். எடப்பாடி பழனிச்சாமி கொண்டு வந்த தீர்மானத்தில் காவிரி மேலாண்மை வாரிய பணிகள் முழுதாக வரையறுக்கப்பட்டுள்ளது என்றும், மேகதாது அணை விவகாரம் குறித்தும் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்றும், […]
இன்று தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை நடைமுறைப்படுத்த கூடாது என்றும், மக்கள் தொகை அடிப்படையில் நாடாளுமன்ற தொகுதிகளில் மறுவரையறை செய்யும் நடவடிக்கையை கைவிடக் கோரியும் 2 தனி தீர்மானங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தார். இந்த தீர்மானத்தின் மீது அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது, நாட்டை ஒரே மதமுள்ள நாடாகா மாற்ற பாஜக முயற்சி செய்கிறது. நாட்டில் மன்னராட்சியை அமல்படுத்த பாஜக முயற்ச்சிப்பதால் தான் தீர்மானம் கொண்டுவரப்படுகிறது. நமது உரிமைகள் பறிபோகாமல் […]
நீர்நிலைகளை அசுத்தப்படுத்தினால் உடனே கைதுசெய்யப்படுவீர்கள் என அமைச்சர் துரைமுருகன் எச்சரித்துள்ளார். வேலூர் மாவட்டத்தில் நேற்று நடந்த கூட்டத்தில் பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரை முருகன், நீர்நிலைகளில் குப்பைகள் கொட்டி அசுத்தப்படுத்தினால் கைது செய்யப்படுவீர்கள் என்று எச்சரித்துள்ளார். நீர்நிலைகளை அசுத்தப்படுத்துவது மிகப்பெரிய குற்றம் ஆகும். ஆகையால் நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும். இதனை தடுக்க குற்றம் செய்பவர்கள் கடுமையான சட்டத்தால் தண்டிக்க படவேண்டும் என்றும் கூறியுள்ளார். நீர்நிலைகளில் குப்பைகளை கொட்டினாலோ, அசுத்தம் செய்தாலோ தனக்கு ஒரு போன் செய்தால் போதும் […]
நாளை திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. நாளை திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்து இருந்தார். அதன்படி, நாளை காலை 9.00 மணிக்கு சென்னை, அமைந்தகரை, பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பள்ளி விங்க்ஸ் கன்வென்ஷன் சென்டரில் பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. இதனையடுத்து, இக்கூட்டத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. திமுக பொதுக்குழு கூட்டத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைவர், பொதுச்செயலாளர், […]
மாணவிகளுக்கு 1000 ரூபாய் உதவித்தொகை கொடுத்துள்ளோம். தாய்மார்களுக்கு 1000 ரூபாய் சில்லறை மாத்திக்கொண்டு இருக்கோம் விரைவில் கொடுத்துவிடுவோம். என கலகலப்பாக பேசியுள்ளார் அமைச்சர் துரைமுருகன். திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்னர், அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளில் படித்த மாணவிகளுக்கு அவர்களின் கல்லூரி படிப்பிற்கு உதவியாக ,மாதம் 1000 ரூபாய் உதவி தொகை கொடுப்போம் என உறுதி அளித்தது. அதே போல, குடும்ப தலைவிக்கு 1000 மாதம் கொடுக்கப்படும் என அறிவித்தனர். இதில் முதற்கட்டமாக, மாணவிகளுக்கு […]
திமுக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அடாவடியில் ஈடுபடுகின்றனர் என ஈபிஎஸ் குற்றசாட்டு. மின் கட்டண உயர்வைக் கண்டித்து, சிவகாசியில் அதிமுக பொதுக்கூட்டத்தில் இடைக்கால பொதுச்செயலாளர் இபிஎஸ் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், அதிமுக தமிழகத்தில் 32 காலம் ஆட்சி செய்திருக்கிறது; தமிழகம் இந்தியாவில் முதன்மை மாநிலம் என சொல்வதற்கு அடித்தளமிட்டது அதிமுக. திராவிட மாடல் திராவிட மாடல் என மூச்சுக்கு 300 தடவை ஸ்டாலின் சொல்கிறார்; அப்படி என்ன திராவிட மாடல் ஆட்சி செய்கிறீர்கள்? என கேள்வி எழுப்பியுள்ளார். […]
திமுகவின் புதிய நிர்வாகிகள் பட்டியலை அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டுள்ளார். கடந்த 2020ஆம் ஆண்டு, திமுகவின் 15-வது உட்கட்சி தேர்தல் தொடங்கியது, இந்த தேர்தல் கொரோனா காரணமாக இந்த ஆண்டு வரை நடைபெற்று வந்தது. அதன்படி, செப்டம்பர் 22 முதல் 25ஆம் தேதி வரை மாவட்ட அவைத் தலைவர், செயலாளர், 3 துணைச் செயலாளர்கள், பொருளாளர், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பொறுப்புகளுக்கான தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில் வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு நேற்று திமுக மாவட்டச் செயலாளர் […]
காவிரியில் மேகதாது அணையை கட்டுவதற்கு கர்நாடகா அரசு தொடர்ந்து முயன்று வரும் நிலையில்,இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளது என்றும்,மேகதாது அணை குறித்து காவிரி மேலாண்மைக் கூட்டத்தில் விவாதிக்கக் கூடாது என்றும் பிரதமர் மோடிக்கு அண்மையில் முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். இதற்கிடையில்,தஞ்சை கல்லணையில் ஆய்வு செய்த பின்னர் காவிரி மேலாண்மை ஆணையத்தின் குழு தலைவர் ஹல்தர் செய்தியாளர்களிடம் கூறுகையில்:”மேகதாது உள்ளிட்ட அணை விவகாரங்கள் குறித்து விவாதிக்க காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு முழு அதிகாரம் […]
காவிரியில் மேகதாது அணையை கட்டுவதற்கு கர்நாடகா அரசு தொடர்ந்து முயன்று வரும் நிலையில்,உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் மேகதாது அணை குறித்து காவிரி மேலாண்மைக் கூட்டத்தில் விவாதிக்கக் கூடாது என்று பிரதமர் மோடிக்கு அண்மையில் முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். இதற்கிடையில்,தஞ்சை கல்லணையில் ஆய்வு செய்தபின்னர் காவிரி மேலாண்மை ஆணையத்தின் குழு தலைவர் ஹல்தர் செய்தியாளர்களிடம் கூறுகையில்:”மேகதாது உள்ளிட்ட அணை விவகாரங்கள் குறித்து விவாதிக்க காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு முழு அதிகாரம் இருக்கிறது.வரும் 23-ஆம் […]
தமிழக பட்ஜெட் இரண்டாவது முறையாக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில்,பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.இதனிடையே,நான்கு நாட்கள் விடுமுறைக்கு பின் நேற்று தொடங்கிய சட்டப் பேரவையில் நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் கிடப்பில் வைத்திருப்பது தொடர்பாக தேவைப்பட்டால் சட்டமன்ற அனைத்து கட்சி கூட்டம் கூட்டப்படும் என்று முதலைமைச்சர் ஸ்டாலின் அவர்கள் தெரிவித்திருந்தார். இந்நிலையில்,தமிழக சட்டப் பேரவையில் இன்று தொழில்துறை,கனிம வளத்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறவுள்ளது.அதன்படி,இன்று காலை 10 மணிக்கு தொடங்கும் சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் எழுப்பும் […]
வன்னியர்களுக்கான 10.5% உள் இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் சட்ட வல்லுனர்களுடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உறுதி. முன்னதாக,வன்னியர்களுக்கான 10.5% உள் ஒதுக்கீட்டை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பாமக, தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்திருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் நாகேஸ்வரராவ், பிஆர் கவாய் அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த வழக்கு விசாரணையின்போது உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறுகையில், சாதியை மட்டுமே அடிப்படையாக கொண்டு இடஒதுக்கீடு வழங்க […]
தமிழகத்தின் அனுமதியின்றி மேகதாதுவில் அணை கட்ட முடியாது என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். காவிரி நீரை பங்கிட்டு கொள்வதில் தமிழகம், கர்நாடகம் இடையே உரிய முடிவு எட்டப்படாமல் தொடர்ந்து சர்ச்சை நிலையே நீடித்து வருகிறது. மேகதாது என்ற இடத்தில் புதிய ஆணை கர்நாடக அரசு முடிவு செய்தது. இதனால், காவிரி ஆற்றின் குறுக்கே புதிய அணை கட்டக்கூடாது என கூறி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கு இன்னும் விசாரணையில் உள்ளது. சமீபத்தில்,மேகதாதுவில் புதிய […]
தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் மூன்றாவது நாளாக இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.அதன்படி,கேள்வி நேரத்தின்போது அதிமுக எம்.எல்.ஏ. அர்ச்சுணன் சட்டப்பேரவையில் பேசுகையில்:எடப்பாடி தொடங்கி ஓ.பி.எஸ், எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டவர்களை பாராட்டி பேசிய போது குறுக்கிட்ட சபாநாயகர் அப்பாவு,”கேள்வி நேரத்தில் கேள்வியை மட்டும் கேளுங்கள்”, என்றார். பாவம்,அவரை விட்டு விடுங்கள்: உடனே,குறுக்கிட்டு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியதாவது:”எல்லாரும் சட்டப்பேரவையில் பேசும் போது தலைவர்,துணைத் தலைவர் பற்றி பேசினார்கள்.தற்போதுதான் எம்எல்ஏ ஒருவர் கட்சியின் அதிமுக கொறடாவான எஸ்.பி.வேலுமணி பற்றி பேசுகிறார்.பாவம்,அவரை […]
தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்கள் கேரள அரசுக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அதில் முல்லைப் பெரியாறு அணை பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள தமிழக அரசுக்கு கேரள அனுமதி அளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். அதன்படி அக்கடிதத்தில், முல்லைப் பெரியாறு அணை பராமரிப்புக்காக 15 மரங்களை வெட்டுவதற்கு அனுமதி தரவேண்டும் என்றும், முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் நிலநடுக்கத்தை அளவிடும் கருவிகளை அமைக்க கேரள வனத்துறை அனுமதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார். மேலும் உச்ச நீதிமன்ற […]
தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளராக டி.ஆர்.பி.ராஜா நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் துரைமுருகன் அவர்கள் தெரிவித்துள்ளார். தி.மு.கழக தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளராக, பணியாற்றி வந்த தமிழக நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் ராஜன் இந்த பதவியில் விலக்கியதையடுத்து, தற்போது, தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளராக டி.ஆர்.பி.ராஜா நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் துரைமுருகன் அவர்கள் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், தி.மு.கழக தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளராக, பணியாற்றி வந்த தமிழக நிதித்துறை அமைச்சர் மாண்புமிகு. பி.டி.ஆர். பழனிவேல் […]
தமிழக அரசின் கீழ் புதிய துறையாக இயற்கை வளத் துறை உருவாக்கப்பட்டு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழக அரசின் கீழ் புதிய துறையாக இயற்கை வளத் துறை உருவாக்கப்பட்டு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தொழில் துறையிலிருந்து சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் பிரிவை பிரிக்க அரசு முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, புவியியல் மற்றும் சுரங்கத் துறை இயக்குநரகம், தமிழ்நாடு கனிமவள நிறுவனம் மற்றும் தமிழ்நாடு மேக்னசைட் நிறுவனம் ஆகியவை இயற்கை வளத்துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு […]
பொதுமக்கள், ஏழை, எளியோர் எளிதாக இணைய வழியாக மணலுக்கான விலையினை செலுத்தி எவ்வித சிரமமும் இன்றி மணலை எடுத்துச் செல்லுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொதுமக்கள், ஏழை எளியோர் புதிதாக வீடுகட்டுதல், பழுதுபார்த்தல் கட்டடமற்ற எவ்வித இதரபணிகளை மற்றும் எவ்வித சிரமமுமின்றி மேற்கொள்ளுவதற்கு, இன்றியமையாத கட்டுமானப் பொருளான ஆற்று மணலை எளிதில் பெறுவதற்காக எளிமையான புதிய வழிமுறைகளை செயல்படுத்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்திரவிட்டுள்ளார்கள். தமிழகத்தில் ஆற்றுப்படுகைகளில் இருந்து ஆற்று […]
சண்முகநாதனின் உடலுக்கு நேரில் சென்று கண்ணீருடன் அஞ்சலி செலுத்திய முதல்வர் மு.க.ஸ்டாலின். முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் அவர்களின் உதவியாளர் கோ. சண்முகநாதன் உடல் நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் சற்று முன் காலமானார். இவரது மறைவுக்கு அரசியல் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களும் இரங்கல் தெரிவித்திருந்தார். இதனையடுத்து தற்போது சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அவரது உடலுக்கு நேரில் சென்று கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்துகிறார். […]
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்துவதற்கு முயற்சிகளும் எடுக்கப்படும் என அமைச்சர் துரைமுருகன் அறிக்கை தெரிவித்துள்ளார். இதுகுறித்து நீர் வள ஆதாரத்துறை அமைச்சர் துரைமுருகன் வெளியிட்ட அறிக்கையில், முல்லைப் பெரியாறு அணையை நான் 05.11.2021 அன்று பார்வையிட்டு பொறியாளர்களுக்கு அணையில் நீர்த்தேக்குவது பற்றிய அறிவுரைகளை வழங்கினேன். பருவ மழை காலத்தில், குறிப்பாக வெள்ள காலங்களில், காலமுறைப்படி வரும் வெள்ள நீரை தேக்கி வைத்து முறைப்படுத்துவதற்கு ஏதுவாக, அணையின் நீர்மட்டத்தை முன்கூட்டியே நிர்ணயித்து. அதன்படி அணையின் […]
14 தடவை முல்லைப் பெரியார் அணைக்கு சென்றேன் என்கிறாரே எதிர்க்கட்சித் துணைத் தலைவர். அது எந்தெந்த தேதிகளில் என்று குறிப்பிடுவாரா? சென்னை : முல்லைப் பெரியாறு அணையி நீர்மட்டம், 136.50 அடியை கடந்த நிலையில், அமைச்சர் துரைமுருகன் தலைமையில் தமிழக அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, பி.மூர்த்தி, சக்கரபாணி ஆகியோர் படகில் சென்று ஆய்வு செய்தனர். அணை நீர்மட்டத்தை 142 அடிவரை தேக்காமல் கேரளாவுக்கு நீர் திறந்து விட்டதற்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில், அமைச்சர்கள் ஆய்வு செய்தனர். இதனை தொடர்ந்து […]