வட மாநிலங்களில் மின்னல் தாக்கியதில் 68 பேர் உயிரிழப்பு ... தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவித்த பிரதமர்..!

Prime Minister Narendra Modi has announced Rs 2 lakh each to the families of 68 people killed in lightning strikes in the northern states.

வட மாநிலங்களில் மின்னல் தாக்கியதில் உயிரிழந்த 68 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சத்தை பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் மின்னல் தாக்கியதில் 68 பேர் உயிரிழந்துள்ளனர். உத்தரப்பிரதேசத்தில் மட்டும் மின்னல் தாக்கி இதுவரை 41 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.  ராஜஸ்தானில் 20 பேரும், மத்தியப் பிரதேசத்தில் மின்னல் தாக்கி 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், மின்னல் தாக்கி ஏற்பட்ட உயிரிழப்பிற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளதுடன், நிதியுதவியையும் அறிவித்துள்ளார். பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில், மின்னல் காரணமாக உயிர் இழப்பு ஏற்பட்டதில் வருத்தம். பாதிக்கப்பட்டவர்களுக்கு மாநில அரசு அனைத்து உதவிகளையும் வழங்கும். பிரதமரின் தேசிய நிவாரண நிதியிருந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

unknown node