50 லட்சம் மோசடி:சற்று முன்...பாஜக ஆதரவாளர் கார்த்திக் கோபிநாத் கைது!

பாஜக ஆதரவாளரும்,யூடியூபருமான கார்த்திக் கோபிநாத் ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.தமிழக அரசின் அறநிலையத்துறையின் அனுமதி பெறாமல்

பாஜக ஆதரவாளரும்,யூடியூபருமானகார்த்திக்கோபிநாத்ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.தமிழக அரசின் அறநிலையத்துறையின் அனுமதி பெறாமல் பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூரில் உள்ள ஒரு கோயிலை புணரமைப்பதாக கூறி ரூ.50 லட்சம் அளவில் பொதுமக்களிடம் நிதி வசூலித்த புகாரில்கார்த்திக்கோபிநாத்கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சமூக ஆர்வலர் பியூஸ் மனுஷ் அளித்த புகாரின் பேரில் கார்த்திக் கோபிநாத் கைது செய்யப்பட்டுள்ளார்.இதனைத் தொடர்ந்து,கார்த்திக் கோபிநாத் அளிக்கும் பதில்கள் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாக ஆவடி மத்தியக் குற்றப்பிரிவு காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.