திமுக ஆட்சிக்கு வந்தால் 300 நாட்கள் வேலை வாய்ப்பு திட்டம் – துரைமுருகன்

Duraimurugan said the 300-day employment program will be available while the 100-day employment program is underway.

100 நாட்கள் வேலைவாய்ப்பு திட்டம் நடைபெற்று வரும் நிலையில்,300 நாட்கள் வேலை வாய்ப்பு திட்டம் கிடைக்கும் என்று துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

திமுக சார்பில் தமிழகம் முழுவதும் ‘அதிமுகவை நிராகரிப்போம்’ என்ற தலைப்பில் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், திருப்பத்தூர் மாவட்டத்தில்  நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் கலந்துகொண்டு பேசினார்.அப்பொழுது அவர் பேசுகையில்,திமுக ஆட்சிக்கு வந்தவுடன், பொங்கல் ,தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் போக வருடத்தில் 365 நாட்களில் 300 நாட்கள் வேலை வாய்ப்பு திட்டம் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் பேசுகையில் , திமுக ஆட்சியில்தான் மக்களுக்குதரமான பொருட்கள் வழங்கப்பட்டது.மக்களுக்கு தரமற்ற பொருட்களை வழங்கி அதிமுக அரசு ஏமாற்றி வருகிறது.விவசாயக் கடன் ரூ.7000 கோடியை திமுக ஆட்சிக்காலத்தில் கருணாநிதி தள்ளுபடி செய்ததாக தெரிவித்தார்.