வேலூரில் 144 கிலோ வெள்ளி, ரூ.32 லட்சம் பணம் பறிமுதல் – 4 பேர் கைது

144 kg of silver nuggets and Rs 32 lakh cash seized without proper documents in Vellore.

வேலூரில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட 144 கிலோ வெள்ளிக்கட்டிகள் மற்றும் ரூ.32 லட்சம் பணம் பறிமுதல்.

வேலூர் மாவட்டம் காட்பாடி ரயில் நிலையத்தில் கொல்லம் செல்லும் ரயிலில் போலீசார் நடத்திய சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.1.05 கோடி மதிப்பிலான 144 கிலோ வெள்ளிக்கட்டிகள், ரூ.32 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. விசாகப்பட்டினத்தில் இருந்து கொல்லம் சென்ற ரயில் காட்பாடி வந்தபோது போலீஸ் சோதனையில் சிக்கியுள்ளது.

இந்த சோதனையில் சேலத்தை சேர்ந்த சதீஷ் குமார், நித்தியானந்தம், பிரகாஷ், சுரேஷ் ஆகிய நான்கு பேரை‌ கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் பிடிபட்ட நான்கு பேரும் நகை வியாபாரிகள் என தெரியவந்துள்ளது. மேலும், வருமானவருதுறையினரிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.