#BREAKING: மத்திய அரசு ஊழியர்களுக்கு 11% அகவிலைப்படி உயர்வு..!

Increase in internal rates for central government employees from 17 per cent to 28 per cent

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 17 சதவீதத்தில் இருந்து 28 சதவீதமாக உயர்வு

பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 11% அகவிலைப்படி உயர்வு என ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 17% இருந்து 28 % ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

அகவிலைப்படி உயர்வு வரும் ஜூலை 1 முதல் நடைமுறைக்கு வருவதாக மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்குர் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்புக்காக பல மாதங்களாக காத்திருக்கும் லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மத்தியில் இது மகிழ்ச்சியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.