100% இந்த விருது ரஜினிக்கு பொருத்தம் – ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து

Kamal Haasan has praised Rajini for winning fans over by appearing on screen.

திரையில் தோன்றுவதன் மூலமே ரசிகர்களை வென்றெடுத்துவிட முடியும் என ரஜினிக்கு, கமல்ஹாசன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த்திற்கு இந்திய சினிமாவில் வாழ்நாள் சாதனையாளர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதை மத்திய அரசு அறிவித்ததை தொடர்ந்து முதல்வர் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில், ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன், ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்து, தனது  ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது உச்ச நட்சத்திரமும் என் மனதிற்கு இனிய நண்பருமான ரஜினிகாந்திற்கு அறிவிக்கப்பட்டிருப்பது பெரும் மகிழ்வளிக்கிறது.

மேலும், திரையில் தோன்றுவதன் மூலமே ரசிகர்களை வென்றெடுத்துவிட முடியும் என்பதை நிரூபித்த ரஜினிக்கு இந்த விருது 100% பொருத்தம் என்றும் பாராட்டி உள்ளார் என்பது குறிப்பிடப்படுகிறது.

unknown node