விவசாயிகளுக்கு "1 லட்சம் மின் இணைப்பு" – அமைச்சர் செந்தில் பாலாஜி..!

Minister Senthil Balaji has said that the Chief Minister has issued an order to provide 1 lakh electricity connection to the farmers in Tamil Nadu in the current financial year.

தமிழகத்தில் நடப்பு நிதியாண்டில் விவசாயிகளுக்கு 1 லட்சம் மின் இணைப்பு வழங்க முதல்வர் உத்தரவு பிறப்பித்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

கரூர் மாவட்டத்தில் உள்ள புலியூரில் நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களுக்கு பொன்னாடை போத்தி மரியாதை தெரிவித்தார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய, மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தமிழகத்தில் நடப்பு நிதியாண்டில் விவசாயிகளுக்கு 1 லட்சம் மின் இணைப்பு வழங்க முதல்வர் உத்தரவு பிறப்பித்ததாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்ப்பன ஆலோசனை கூட்டம் திருநெல்வேலியில் நடைபெறவுள்ளது என தெரிவித்தார். வடசென்னை, தூத்துக்குடியை தொடர்ந்து மேட்டூர் அனல் மின்நிலையத்திலும் ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றார். கடந்த 18 ஆண்டுகளாக 4 லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகள் இலவச மின் இணைப்பு கேட்டு காத்திருப்பதாக தெரிவித்தார்.