இன்று முதல் +2 தேர்வு விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்யலாம்.!

பிளஸ்-2 பொதுத்தேர்வு, மறுதேர்வு மற்றும் பிளஸ்-1 அரியர் தேர்வு எழுதி விடைத்தாள் நகல் விண்ணப்பித்தவர்களுக்கு  விடைத்தாள் நகலை இன்று பிற்பகல் முதல்

பிளஸ்-2 பொதுத்தேர்வு, மறுதேர்வு மற்றும் பிளஸ்-1 அரியர் தேர்வு எழுதி விடைத்தாள் நகல் விண்ணப்பித்தவர்களுக்கு  விடைத்தாள் நகலை இன்று பிற்பகல் முதல்www.dge.tn.gov.inஎன்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

விடைத்தாள் நகலைwww.dge.tn.gov.inஎன்ற இணையதளத்தில் Notification  என்ற பட்டனை கிளிக் செய்து தங்களின் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து தாங்கள் விண்ணப்பித்த பாடங்களுக்குரிய விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்யலாம்.

பதிவிறக்கம் செய்த விடைத்தாள் நகலை மறுகூட்டல் , மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பம் செய்ய விரும்பினால், அதே இணையதளத்தின் மூலம் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து. இந்த விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 2 நகல்கள் எடுத்து வரும்  21-ம் தேதி முதல் 25-ம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட கல்வி அலுவலர் அலுவலகத்தில் ஒப்படைக்கவேண்டும்.

இன்று முதல் +2 தேர்வு விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்யலாம்.!