#BreakingNews : ஜப்பானின் புதிய பிரதமராக யோஷிஹைட் சுகா தேர்வு

ஜப்பான்  நாட்டின் புதிய பிரதமராக யோஷிஹைட் சுகா நாடாளுமன்றத்தல் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

ஜப்பான்  நாட்டின் புதிய பிரதமராக யோஷிஹைட் சுகா நாடாளுமன்றத்தல் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

ஜப்பானின் பிரதமராக நீண்ட நாட்கள் இருந்தவர் ஷின்சோ அபே.இவர் 2006 முதல் 2007  வரை ,2012 முதல் 2014 வரை ,2014 முதல் 2017 வரை ,2017 முதல் 2020 வரை பிரதமராக பதவி வகித்தவர்.கடந்த சில மாதங்களாக ஷின்சோ அபே உடல்நிலை குறித்த செய்திகள் பரவி  வந்தது. குறிப்பிடப்படாத நோய் காரணமாக சமீபத்தில் இரண்டு முறை மருத்துவ பரிசோதனைகளுக்காக மருத்துவமனைக்கு சென்று வந்த நிலையில், காய்ச்சல் அதிகரித்துள்ளதாக கூறப்பட்டது.

பின்னர் இவர் தனக்கு உடல்நலக்குறைவு இருப்பதாகவும், தனது பதவியை ராஜினாமா செய்து கொள்வதாகவும் ஷின்சோ அபே அறிவித்திருந்தார் .இந்நிலையில் ஷின்சோ அபே பதவி விலகியதைத் தொடர்ந்து ஜப்பான்  நாட்டின் புதிய பிரதமராக யோஷிஹைட் சுகா நாடாளுமன்றத்தல் தேர்ந்தெடுக்கப்பட்டார்.